”ஏய் தலையெல்லாம் சுத்துது நிப்பாட்டுங்கப்பா”..!! குழந்தையை வாஷிங் மெஷினில் போட்டு துவைத்த தாய்..!!

வாஷிங் மெஷினில் துணிகளோடு சேர்த்து குழந்தை துவைக்கப்பட்ட சம்பவம் டெல்லியில் அரங்கேறியுள்ளது.

டெல்லி மாநிலம் வசந்த்கன்ஞ் பகுதியில் சோப்பு தண்ணீர் நிரம்பிய டாப்-லோட் வாஷிங் மெஷினில் குழந்தை ஒன்று தவறுதலாக விழுந்துள்ளது. குழந்தை நாற்காலியில் ஏறி வாஷிங் மெஷினில் தவறி விழுந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. கிட்டத்தட்ட 15 நிமிடங்கள் வீடு முழுவதும் தேடிய பிறகு, குழந்தை சோப்பு தண்ணீர் நிரம்பிய வாஷிங் மெஷினுக்குள் மயங்கிக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், குழந்தையை உடனடியாக மீட்டு டெல்லி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

மயங்கிய நிலையில் கிட்டத்தட்ட 7 நாட்கள் கோமாவில் இருந்த குழந்தை, பல உயர்தர சிகிச்சைகளுக்கு பிறகு முழுமையாக குணமடைந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், மருத்துவமனைக்கு கொண்டு வந்த போது, ​​குழந்தை சுயநினைவின்றி, குளிர்ச்சியாக, சுவாசிப்பதில் சிரமத்துடன் இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அத்துடன், சோப்பு தண்ணீரால் குழந்தையின் பல உறுப்புகள் பாதிக்கப்பட்டிருந்ததாக குழந்தையை கவனித்து வந்த குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர் தெரிவித்துள்ளார். மேலும், குழந்தைக்கு தேவையான ஆன்டி-பயாடிக்குகள், IV ஃப்ளூயிட் சப்போர்ட் ஆகியவை கொடுக்கப்பட்டு மீட்கப்பட்டதாக அவர் கூறினார்.

Chella

Next Post

ஓசூரை உலுக்கிய ராணுவ வீரர் கொலை! திமுக கவுன்சிலர் மற்றும் ஒரு காவலர் உட்பட ஒன்பது பேர் கைது!

Thu Feb 16 , 2023
கிருஷ்ணகிரியில் உள்ளூர் திமுக கவுன்சிலர் குடும்பத்தினருடன் ஏற்பட்ட தகராறில் ராணுவ வீரர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தக் கொலை தொடர்பாக திமுக கவுன்சிலர் ஒரு போலீஸ்காரர் உட்பட ஒன்பது பேரை காவல்துறை கைது செய்து இருக்கிறது. கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பட்டி தாலுகா அருகே உள்ள வேலம்பட்டி எம்ஜிஆர் நகரைச் சார்ந்தவர் மாதையன். இவரது இரண்டு மகன்கள் ஆன பிரபாகரன் மற்றும் பிரபு ஆகியோர் […]

You May Like