பிக்பாஸ் பிரபலம் ஆயிஷா, ஒருவழியாக தன்னுடைய காதலர் யார் என புகைப்படம் வெளியிட்டு அறிவித்துவிட்ட நிலையில், இவர்களின் ரொமான்டிக் போட்டோஸ் சில சமூக வலைதளத்தில் தீயாக பரவி வருகிறது.
வெள்ளித்திரை நடிகைகளுக்கு நிகரான ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கும் சின்னத்திரை நடிகைகளில் ஒருவர் ஆயிஷா. இவர், சமீபத்தில் விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்து கொண்டார். ஆரம்பத்தில் இருந்தே தனக்கென ஒரு வட்டம் போட்டுக்கொண்டு அதன் உள்ளேயே இருந்த ஆயிஷா, அதிகமாக தன்னை பற்றியும், தன்னுடைய குடும்பத்தை பற்றியும் வெளியில் கூறியது இல்லை. டாஸ்க் ஒன்றின் போது கூட, தன்னை பற்றிய தகவல்களை கூற மறுத்துவிட்டார். பிக்பாஸ் வீட்டில் ஆரம்பத்தில் சண்டைக்கோழியாக வலம் வந்தாலும், போகப்போக ரசிகர்களின் மனம்கவர்ந்த போட்டியாளராக மாறினார். ஒருமுறை தன்னுடைய தோழி தனலக்ஷ்மியிடம்… யோகேஸ்வரன் என்பவரை காதலித்து வருவதாகவும், ஆனால் தன்னுடைய குடும்பத்தினர் திருமணத்திற்கு ஒப்புக்கொள்ள மறுப்பதாக கூறி தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தார்.
அதே போல் தன்னுடைய காதலர் யார் என்பதை, அறிவிக்கும் விதமாக முகம் தெரியாமல் முதலில் புகைப்படம் வெளியிட்ட ஆயிஷா, பின்னர் காதலர் தினத்தன்று தன்னுடைய காதலரின் முகத்தை வெளியிட்டார். வெட்டிங் செட்டப் போட்டோ ஷூட்டின் போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு, காதலை வெளிப்படுத்திய ஆயிஷாவின் மற்ற சில புகைப்படங்களும் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. ஆயிஷா தன்னுடைய காதலர் யோகேஸ்வரனுடன் டேட்டிங் செய்யும் இந்த புகைப்படங்கள் காதலர் தினத்தில் எடுக்கப்பட்டிருக்கலாம் என தெரிகிறது.