தி காட்பாதர் பட நடிகர் ஜேம்ஸ் கேன் நேற்றிரவு காலமானார்.. அவருக்கு வயது 82..
ஹாலிவுட்டில் 1960களில் ஜேம்ஸ் கேன் சிறிய வேடங்களில் நடிக்க தொடங்கினார்.. பில்லி வைல்டர் ஹோவர்ட் ஹாக்ஸ் மற்றும் கொப்போலா உள்ளிட்ட புகழ்பெற்ற இயக்குனர்களின் படங்களில் சிறிய வேடங்களில் அவர் நடித்து வந்தார்.. ஆனால், ஹாலிவுட்டின் தி காட்பாதர் (The Godfather) படத்தில், ஜேம்ஸ் கேன் நடித்த சோனி கோர்லியோன் கதாப்பாத்திரம் அவருக்கு திருப்பு முனையாக அமைந்தது.. இதன் மூலம் அவர் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார்.. தி காட்பாதர் 2 படத்திலும் கௌரவ தோற்றத்தில் அவர் மீண்டும் நடித்தார்.
மேலும், Brian’s Song (1971), Cinderella Liberty (1973), Rollerball (1975), A Bridge Too Far (1977), Thief (1981), Gardens of Stone (1987), Misery (1990), Dick Tracy (1990), Bottle Rocket (1996), The Yards (2000), Dogville (2003), Elf உள்ளிட்ட பல படங்களில் தனது நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.. இதுதவிர, 4 கோல்டன் குளோப் விருது, ஒரு எம்மி மற்றும் ஆஸ்கர் உட்பட பல விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டார்.
இந்நிலையில் வயது மூப்பு காரணமாக ஜேம்ஸ் கேன் நேற்றிரவு உயிரிழந்தார்.. அவரின் குடும்பத்தினர் இந்த செய்தியை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர்.. அவரின் மறைவுக்கு ஹாலிவுட் பிரபலங்கள் மட்டுமின்றி ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்..