fbpx

”திவாலானது பாகிஸ்தான்”..!! உண்மையை போட்டுடைத்த பாதுகாப்புத்துறை அமைச்சர்..!!

பாகிஸ்தான் ஏற்கனவே திவாலாகிவிட்டது என்றும், திவாலாகிவிட்ட ஒரு நாட்டில்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்றும் அந்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர் பரபரப்பு தகவலை கூறியுள்ளார்.

இலங்கையைத் தொடர்ந்து கடுமையான பொருளாதார நெருக்கடியில் பாகிஸ்தான் சிக்கித் தவிக்கிறது. கடந்த மாத இறுதியில் பாகிஸ்தானில் பணவீக்கம் 24.5% ஆக உயர்ந்தது. வெளிச்சந்தையில் அத்தியாவசிய, உணவுப்பொருட்களின் விலை, முந்தைய மாதத்தை விட 30% முதல் 50% வரை அதிகரித்து காணப்பட்டது. தற்போது பாகிஸ்தானில் ஒரு லிட்டர் பால் விலை ரூ.250-க்கும், இறைச்சி ரூ.750-க்கும் விற்பனையாகி வருகிறது. இதனால், சாமான்யர்களின் அன்றாட வாழ்க்கை சவாலாக மாறி வருகிறது.

இந்நிலையில், பாகிஸ்தானின் சியால்கோட் நகரில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பேசிய அந்நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா முகமத் அசிப், ”பாகிஸ்தான் ஏற்கனவே திவாலாகிவிட்டது. இதற்கு அரசியல்வாதிகள், அதிகாரிகள் உட்பட அனைவரும் பொறுப்பு. திவாலான நாட்டில்தான் நாம் வாழ்கிறோம். நமது பிரச்சனைகளுக்கான தீர்வு நமது நாட்டிலேயே உள்ளது. பாகிஸ்தானின் பிரச்சனைகளுக்கு சர்வதேச நாணய நிதியத்திடம் தீர்வு இல்லை” என்று தெரிவித்தார்.

Chella

Next Post

மாணவர்களுக்கான சிக்கன் லெக் பீசை பதுக்கி வைத்து சாப்பிடும் ஆசிரியர்கள்..!! ஆத்திரத்தில் அறைக்குள் விட்டு பூட்டிய பெற்றோர்..!!

Sun Feb 19 , 2023
மேற்கு வங்க மாநிலம் மால்டா மாவட்டத்தில் இங்கிலீஷ் பஜார் பகுதியில் அம்ரிதி காலனியில் முதன்மை பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இதில் மதிய உணவு திட்டத்தின் கீழ் மாணவ, மாணவிகளுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது. அவற்றில், சிக்கன் கறியும் வழங்கப்பட்டு உள்ளது. ஆனால், அவற்றில் உள்ள லெக் பீசை ஆசிரியர்கள் சிலர் எடுத்து தங்களுக்கு வைத்து கொண்டதாக கூறப்படுகிறது. இதன்பின் மீதமுள்ள சிக்கனின் கழுத்து, வயிறு உள்ளிட்ட பிற பகுதிகளை […]

You May Like