fbpx

அனுமதியின்றி பேரணி.. பாஜக தலைவர் அண்ணாமலை உட்பட 3,500 பேர் மீது வழக்குப்பதிவு..

சென்னையில் அனுமதியின்றி பேரணி நடத்திய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உட்பட 3,500 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது..

கிருஷ்ணகிரி மாவட்டம் போர்ச்சம்பள்ளியில் உள்ளூர் திமுக கவுன்சிலர் குடும்பத்தினருடன் ஏற்பட்ட தகராறில் ராணுவ வீரர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தக் கொலை தொடர்பாக திமுக கவுன்சிலர் உட்பட 9 பேரை காவல்துறை கைது செய்துள்ளது. இந்த சம்பவத்திற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்ததோடு, போராட்டத்தையும் நடத்தியது. அதன்படி நேற்று சென்னையில் ஓமந்தூரார் மருத்துவமனை முதல் போர் நினைவுச் சின்னம் வரை மெழுகுவர்த்தி ஏந்தி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் அமைதி பேரணி நடைபெற்றது.

இந்நிலையில் சென்னையில் அனுமதி இன்றி பேரணி நடத்திய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உட்பட 3,500 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.. சட்டவிரோதமாக கூடுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளில் திருவல்லிக்கேணி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்..

Maha

Next Post

வாரத்தில் 4 நாட்கள் வேலை.. சோதனை திட்டம் வெற்றி.. மகிழ்ச்சியில் ஊழியர்கள்..

Wed Feb 22 , 2023
“வாரத்தில் 4 நாள் வேலை..” சோதனை திட்டம் இங்கிலாந்தில் வெற்றி பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.. கோவிட் தொற்றுநோய் உலகெங்கிலும் உள்ள பணியிடங்களில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.. கிட்டத்தட்ட அனைத்து நிறுவனங்களும் ஒரு வருடத்திற்கும் மேலாக வீட்டிலிருந்து வேலை செய்யும் முறையை அமல்படுத்தின. எனினும் கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு, மீண்டும் அலுவலகத்தில் வேலை செய்யும் முறையை பல நிறுவனங்கள் அமல்படுத்தின.. இதனிடையே பல நிறுவனங்கள் எதிர்காலத்திற்காக தங்கள் பணி முறையை நிரந்தரமாக […]

You May Like