ரயிலில் பயணிக்கும்போது இனி நீங்கள் உணவு ஆர்டர் செய்தால், கூடுதல் பணம் செலுத்த வேண்டியிருக்கும். ஆம், ரயில்வே உணவுப்பொருட்களின் விலையை அதிகரித்துள்ளது. அதன்படி, இனி மக்கள் ரயில்வேயில் விலையுயர்ந்த (indian railways food price list) உணவுகளை மட்டுமே பெற முடியும். இந்த விலை உயர்வானது ரொட்டி முதல் தேநீர் வரை என அனைத்திலும் பொருந்தும். ரயில்வே உணவு மெனுவில் மேலும் பல்வேறு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக IRCTC தெரிவித்துள்ளது. இதனால் தான் ரயில் உணவின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. அதே நேரம் ரயிலின் பேண்ட்ரி காரில் காணப்படும் சாதாரண உணவுகளின் விலையில் எந்த மாற்றமும் இல்லை என IRCTC விளக்கம் அளித்துள்ளது.

ரொட்டி 3 ரூபாயிலிருந்து 10 ரூபாயாக உயர்வு, சாண்ட்விச் ரூ.15 -ரூ.25 வரை உயர்வு, மசாலா தோசை 40 ரூபாயிலிருந்து 50 ரூபாயாக உயர்வு, பிரட்பக்கோடா 10 ரூபாயிலிருந்து 15 ரூபாயாக உயர்வு, ஆலுபோண்டா 7 ரூபாயிலிருந்து 10 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.