சீனாவின் எல்லைக்கு அருகில் தஜிகிஸ்தானில் 6.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
சீனாவின் தொலைதூர மேற்கு ஜின்ஜியாங் பிராந்தியத்திற்கு அருகிலுள்ள கிழக்கு தஜிகிஸ்தானில் இன்று 6.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் தஜிகிஸ்தானின் முர்கோப் நகருக்கு மேற்கே 67 கிலோமீட்டர் தொலைவிலும், 20 கிலோமீட்டர் ஆழத்திலும் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாமிர் மலைகளில் சில ஆயிரம் மக்கள் வசிக்கும் மாவட்ட தலைநகரம் முக்ரோப் ஆகும். அங்கு நிலநடுக்கம் 7.2 ரிக்டர் அளவு மற்றும் 10 கிலோமீட்டர் ஆழத்தில் பதிவாகியுள்ளதாக சீன நிலநடுக்க வலையமைப்பு மையம் தெரிவித்துள்ளது.