எருமைப்பால் லிட்டருக்கு 5 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது.
மும்பை பால் உற்பத்தியாளர்கள் சங்கம் நகரில் மார்ச் 1 முதல் எருமைப்பால் லிட்டருக்கு 5 ரூபாய் வரை விலை உயர்வை அறிவித்துள்ளது. இந்த விலை ஏற்றம் குறித்து பேசிய சங்கத்தின் தலைவர் சிகே சிங்; எருமைப்பாலின் விலை மார்ச் ஒன்றாம் தேதி முதல் உயர்த்தப்பட்டுள்ளது. நகரத்தில் உள்ள 3,000 சில்லறை விற்பனையாளர்கள் – லிட்டருக்கு ரூ.80லிருந்து ரூ.85 ஆக உயர்த்தப்பட்டு, ஆகஸ்ட் 31 வரை அமலில் இருக்கும் என தெரிவித்துள்ளார்.
செப்டம்பர் 2022க்குப் பிறகு, எருமைப் பால் விலை லிட்டருக்கு 75 ரூபாயில் இருந்து 80 ரூபாயாக உயர்த்தப்பட்டதன் மூலம், ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். தற்பொழுது பால் விலையில் ஏற்பட்டுள்ள இரண்டாவது முறையான விலை உயர்வு மீண்டும் மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது.