மாணவியின் நிர்வாணப்படங்களை சமூக ஊடகங்களில் வெளியிட்ட காதலனை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இலங்கை அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக காவல் நிலைய சிறுவர் பெண்கள் பிரிவுக்கு கடந்த புதன்கிழமை அன்று நற்பிட்டிமுனை பகுதியைச் சேர்ந்த தனது மகளின் அந்தரங்க புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளதாக இளைஞர் மீது புகார் ஒன்று அளிக்கப்பட்டது. இதையடுத்து, விசாரணைகளை முன்னெடுத்த காவல்துறையினர், மாணவியை காதலிப்பதாக சந்தேகிக்கப்பட்ட திருக்கோவில் பகுதியைச் சேர்ந்த 25 வயது இளைஞரை காவல்நிலையம் வரவழைத்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், மாணவியை 2 வருடங்களாக காதலிப்பதாக ஏமாற்றி, அக்கால கட்டத்தில் தனியார் விடுதி ஒன்றில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததுடன், வீடியோவையும் எடுத்து வைத்துள்ளார் அந்த இளைஞர். பின்னர், தங்களது காதல் விவகாரம் மாணவியின் பெற்றோருக்கு தெரியவந்ததும் அவர்கள் கண்டித்துள்ளனர். இதனால், இளைஞரிடம் பேசுவதை மாணவி தவிர்த்துள்ளார். இதனால், விரக்தி அடைந்த இளைஞர், மாணவியின் பெற்றோருக்கு செல்போனில் தொடர்பு கொண்டு மிரட்டியதாக கூறப்படுகிறது. மேலும், மாணவியுடன் உல்லாசமாக இருந்த வீடியோவையும் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இதையடுத்து, அந்த இளைஞரை கைது செய்த கவால்துறையினர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.