fbpx

அடுத்த அதிரடி…! கல்வி உதவித்தொகை பெற ஆதார் கட்டாயம்…! சாதி சான்று உடனே வழங்க உத்தரவு…!

பட்டியலின மாணவர்களுக்கான போஸ்ட் மெட்ரிக் உதவித்தொகை இணையவழி சாதி சான்று கேட்டு விண்ணப்பிக்கும் போது உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது.

2022-2023 ஆம்‌ கல்வியாண்டு முதல்‌ மாணாக்கர்‌ கல்வி உதவித்‌ தொகை விண்ணப்பிக்க ஆதார்‌ எண்‌, ‘இணையவழியில்‌ பெறப்பட்ட வருமான சான்று, சாதி சான்று உள்ளிட்ட ஆவணங்கள்‌ கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்‌ அடிப்படையில்‌, தமிழ்‌நாடு இ-சேவை மையம்‌ மூலம்‌ ஆதிதிராவிடர்‌, பழங்குடியினர்‌ மற்றும்‌ கிருத்துவ மதம்‌ மாறிய ஆதிதிராவிடர்‌ மாணக்கருக்கான கல்வி உதவித்தொகை இணையதளம்‌ உருவாக்கப்பட்டு, மாணாக்கரின்‌ சாதிச்‌ சான்றிதழ்‌, வருமான சான்றிதழ்‌ மற்றும்‌. ஆதார்‌ விவரங்கள்‌ சம்பந்தப்பட்ட தரவு தளத்தில்‌ இருந்து தானாகவே எடுத்து சரிபார்க்கும்‌ முறை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

எனவே போஸ்ட்‌ மெட்ரிக்‌ கல்வி உதவித்தொகை திட்டத்தின்‌ கீழ்‌ மாணாக்கர்‌ கல்வி உதவித்தொகை கோரி விண்ணப்பிக்க ‘இணையவழியில்‌ பெறப்பட்ட சாதிச்‌ சான்றிதழ்‌ அவசியம்‌ என்பதால்‌, ஏற்கனவே இயன்முறை சாதிச்‌சான்றிதழ்‌ வைத்திருக்கும்‌ மாணாக்கர்‌ இணையவழி சாதிச்‌ சான்றிதழ்‌ பெற விண்ணப்பிக்கும்‌ போது அவர்களுக்கு உடணடியாக இணையவழி சாதி சான்று வழங்க அனைத்து மாவட்ட வருவாய்‌ அலுவலர்களுக்கு, வட்டாட்சியர்‌, கோட்ட வருவாய்‌ அலுவலர்‌ உரிய தெளிவுரை அறிவுரை வழங்க வேண்டும்.

Vignesh

Next Post

கோயிலையும் காணோம்!... சிலைகளையும் காணோம்!... பொன்.மாணிக்கவேல் குற்றச்சாட்டு!

Mon Feb 27 , 2023
கள்ளக்குறிச்சியில் இருந்த 3 கோயில்கள், விழுப்புரத்தில் பழமைவாய்ந்த பல கோடி ரூபாய் மதிப்பிலான இரண்டு சிலைகள் காணாமல் போனதாக முன்னாள் ஐஜி பொன்.மாணிக்கவேல் குற்றம் சாட்டியுள்ளார். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கைலாசநாதர் கோயிலில் முன்னாள் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறை ஐஜி பொன்.மாணிக்கவேல் சாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூரில், தற்போது பக்தஜனேஸ்வரர் கோயில் மட்டுமே உள்ளதாக கூறினார். பல்லவர் காலத்தில் […]

You May Like