வெங்காய ஏற்றுமதியை அரசு கட்டுப்படுத்தவோ தடை செய்யவோ இல்லை. வெங்காயத்தின் தற்போதைய ஏற்றுமதிக் கொள்கை ‘தாராளமானது’. வெங்காய விதை ஏற்றுமதி மட்டுமே ‘கட்டுப்படுத்தப்பட்டுள்ளது’. அதுவும் வெளிநாட்டு வர்த்தகத் தலைமை இயக்குநரக அங்கீகாரத்தின் கீழ் அனுமதிக்கப்படுகிறது.
வெட்டப்பட்ட, துண்டுகளாக்கப்பட்ட அல்லது பொடி வடிவில் அரக்கப்பட்ட அனைத்து வகை வெங்காயம் மற்றும் பெங்களூர் ரோஸ் வெங்காயம், கிருஷ்ணாபுரம் வெங்காயம் ஆகியவற்றிற்கு வெட்டப்பட்ட, துண்டுகளாக்கப்பட்ட அல்லது பொடி வடிவில் ‘தடை’ என்பதிலிருந்து விலக்களித்து ‘தாராளமாக ‘ என்று திருத்தப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகிறது.