fbpx

செம குட் நியூஸ்..!! அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம்..!! தமிழ்நாடு அரசு முக்கிய உத்தரவு..!!

தமிழ்நாட்டில் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்துவதற்கான விரிவான அறிக்கையை அனுப்ப அனைத்துத் துறை செயலாளர்களுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என அரசு ஊழியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். கடந்த சட்டமன்ற தேர்தலின் போது திமுகவின் தேர்தல் அறிக்கையில், திமுக ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும் என முதலமைச்சர் முக.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து ஆட்சிக்கு வந்தவுடன் இத்திட்டத்தை அமல்படுத்த சாத்தியக்கூறுகள் உள்ளதா? என்பதை ஆராய வல்லுநர் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு பரிந்துரைகளை நன்கு பரிசீலித்து, உரிய முடிவை மேற்கொண்டு அரசாணை வெளியிடப்படும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கத்திடம் தமிழ்நாடு அரசு ஏற்கனவே உறுதியளித்துள்ளது.

இதனையடுத்து, பழைய ஓய்வூதிய திட்டம் குறித்த விரிவான அறிக்கையை அனுப்ப அனைத்து துறை செயலாளர்களுக்கும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, புதிய ஓய்வூதிய திட்டத்தில் இருந்து பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு மாற விரும்பும் ஊழியர்களின் விவரங்களை அனுப்ப அனைத்து துறை செயலாளர்களுக்கு தமிழக அரசின் நிதித்துறை உத்தரவிட்டுள்ளது. ஊழியர்கள் அளிக்கும் தகவல்கள், நீதிமன்ற வழக்கு, அரசாணைகள் அடிப்படையில் தமிழக அரசு இறுதி முடிவெடுக்கும். அரசு ஊழியர்களுக்காக தற்போது நடைமுறையில் உள்ள புதிய ஓய்வூதிய திட்டத்திலிருந்து மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு கொண்டு வருவது குறித்து தமிழக அரசு தீவிர ஆலோசனை செய்து வருகிறது.

Chella

Next Post

கள்ளக்குறிச்சி பள்ளி தொடர்பான வழக்கு.. உயர்நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு..

Tue Feb 28 , 2023
கள்ளக்குறிச்சி பள்ளியில் அனைத்து வகுப்புகளையும் நடத்தும் வகையில் முழுமையாக திறக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.. கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் சின்னசேலம் அருகே கனியாமூர் சக்தி மெட்ரிக் பள்ளியில் படித்து வந்த 12ஆம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி கடந்த ஆண்டு ஜூலை 13ஆம் தேதி உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வந்தது. இந்நிலையில், ஜூலை 17ஆம் தேதி மாணவி ஸ்ரீமதி உயிரிழப்புக்கு நீதி கேட்டு நடைபெற்ற […]

You May Like