fbpx

சிலிண்டர் விலை ரூ.350 உயர்வு.. அதிர்ச்சியில் பொதுமக்கள்.. விவரம் உள்ளே..

டெல்லியில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை ரூ.350 உயர்ந்துள்ளது..

சர்வதேச கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப பொதுத்துறை நிறுவனங்கள் சிலிண்டர் விலையை மாற்றியமைக்கின்றன. அந்த வகையில் ஒவ்வொரு மாதமும் சிலிண்டர் விலை திருத்தப்படுகின்றன. வீட்டு உபயோகத்திற்கு 14.20 கிலோ எடை கொண்ட சிலிண்டரும், வணிகப் பயன்பாட்டிற்கு 19 கிலோ எடை கொண்ட சிலிண்டரும் விநியோகம் செய்யப்படுகின்றன.

சிலிண்டர்

இந்நிலையில் மாதத்தின் முதல் நாளான இன்று சிலிண்டர் விலை உயர்ந்துள்ளது.. அதன்படி சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை ரூ.223 உயர்ந்து, ரூ.2,268க்கு விற்பனையாகிறது.. மேலும் 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலை ரூ.50 உயர்த்தப்பட்டு, ரூ.1,118.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.. ஏற்கனவே விலைவாசி உயர்வால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சாமானிய மக்களுக்கு இந்த விலை உயர்வு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது..

உள்ளூர் வரிகள் காரணமாக எல்பிஜி சிலிண்டரின் விலை ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்திற்கு மாறுபடும். அந்த வகையில் டெல்லியில், 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டு சிலிண்டரின் விலை ரூ. 350.50 உயர்ந்து, 2119.50 ஆக உள்ளது.. இந்த விலை உயர்வு இன்று அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது..

மற்ற நகரங்களில் வீட்டு பயன்பாட்டு சிலிண்டர் விலை எவ்வளவு..?

  • புது தில்லி ரூ. 1,103.00
  • கொல்கத்தா ரூ. 1,079.00
  • மும்பை ரூ. 1,052.50
  • குர்கான் ரூ. 1,061.50
  • நொய்டா ரூ. 1,050.50
  • பெங்களூரு ரூ. 1,055.50
  • புவனேஸ்வர் ரூ. 1,079.00
  • சண்டிகர் ரூ. 1,112.50
  • ஹைதராபாத் ரூ. 1,105.00
  • ஜெய்ப்பூர் ரூ. 1,056.50
  • லக்னோ ரூ. 1,090.50
  • பாட்னா ரூ. 1,201.00
  • திருவனந்தபுரம் ரூ. 1,062.00

Maha

Next Post

Ford நிறுவனத்தில் வேலை வாய்ப்பு…! சட்ட படிப்பு முடித்த நபர்கள் விண்ணப்பிக்கவும்…!

Wed Mar 1 , 2023
Ford நிறுவனத்தில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விருப்பம் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பலாம். இந்த Business Architect பணிகளுக்கு என பல்வேறு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளது. பணிக்கு விண்ணப்பிப்போர் தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்யப்படவுள்ளனர். விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் பணிக்கு தொடர்பு உடைய படிப்பில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். பணிக்கு […]
Ford நிறுவனத்தில் வேலை..!! மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா..? உடனே அப்ளை பண்ணுங்க..!!

You May Like