fbpx

ஒரு இரவுக்கு இத்தனை லட்சமா?… உலகின் மிக பிரம்மாண்ட ரிசார்ட் இதுதான்!… எத்தனை ஆச்சரியங்கள், அதிசயங்கள் தெரியுமா?

உலகில் மிக அதிநவீன வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ள அட்லாண்டிஸ் தி ராயல் என்ற பிரம்மாண்ட ரிசார்ட்டில் உள்ள சுவாரஸ்யங்களை பார்க்கலாம்.

துபாயை தளமாகக் கொண்ட ஹோட்டல் நிறுவனமான கெர்ஸ்னர் இன்டர்நேஷனல் லிமிடெட், கடந்த ஜனவரி மாதம் அட்லாண்டிஸ் தி ராயல் என்ற சொகுசு ரிசார்ட் அறைகள் கொண்ட ஹோட்டல் திறந்தது. இந்த ஹோட்டலில் தங்குவதற்கு அதிகபட்சமாக ஒரு இரவுக்கு 1000000 டாலர் அதாவது 85 லட்சம் ரூபாய் வரை கட்டணமாக பெறப்படும் நிலையில், அங்கு தங்கியிருக்கும் ஒவ்வொரு நொடியும் நம்பமுடியாத வகையில் புதுபுது அனுபவங்களை தரும் வகையில் அதிநவீன வசதியுடன் இயற்கை எழில் கொஞ்சம் கடல் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. வெளியில் இருந்து பார்ப்பதற்கு பிரம்மாண்டமாக இருக்கும் இந்த ஹோட்டல், 795 அறைகள், நீர் ஊற்றுக்கள், ஷாப்பிங் செய்யும் பிரமாண்டமான மால் உட்பட பல ஆச்சரியமான விஷயங்கள் உள்ளிட்ட ஏராளமான வசதிகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது.

ஹோட்டலின் கதவை திறந்ததும், கண்ணாடி சுவர்களுக்குள் தண்ணீர் கொட்டும் ஆச்சரியம், அவ்வப்போது நெருப்பு எரியும் அதிசயம் ஆகியவை அடங்கிய சொகுசு ரிசார்ட்டில், நீங்கள் அறையில் இருந்தால் போதும் உங்களுக்கு வேண்டிய அனைத்தும் அறையை தேடி வரும். இதுவரை வாழ்க்கையில் பார்த்திடாத ஆடம்பரமான குளியல் அறை சிறிய நீச்சல் குளம் ஆகியவை கொண்ட இந்த அறையில் அதிநவீன லேட்டஸ்ட் வசதிகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், மொத்தம் 22 மாடிகள் அடங்கிய இதில் திறந்தவெளி இசை கிளப், உலகில் இதுவரை இல்லாத ஆடம்பரமான ஸ்பா உள்ளது என்பதும் பிரமிக்க வைக்கும் அளவுடன் கூடிய இதில் ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக அனுபவிக்கும் வசதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

டால்பின்களுடன் கூடிய தியான அறை, நீர் பூங்கா உள்பட, இதில் தங்கும் விருந்தினர்கள் அறையில் இருந்து கொண்டே பாரசீக வளைகுடா, மனிதனால் உருவாக்கப்பட்ட ஜுமாரா தீவுக் கூட்டத்தின் விளிம்புகள், கோடீஸ்வரர்கள் மற்றும் அரச குடும்பங்களின் மாளிகையையும் பார்த்து ரசிக்கும் வகையில் இந்த பிரம்மாண்ட ஹோட்டல் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த கட்டிடத்தை கட்டுவதற்கு 8 ஆண்டுகள் ஆனது என்பதும் இந்த ரிசார்ட், உலகின் மிகப்பெரிய அதிசயங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

Kokila

Next Post

இண்டர்நெட் முடக்கம் எதிரொலி!... தொடர்ந்து 5வது ஆண்டாக இந்தியா முதலிடம்!... முழுவிவரம் உள்ளே!

Fri Mar 3 , 2023
உலக நாடுகள் பட்டியலில் இண்டர்நெட் முடக்கத்தில் தொடர்ந்து 5வது ஆண்டாக இந்தியா முதலிடத்தில் இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகிலேயே இணைய தடங்கல்கள் அதிகம் உள்ள நாடுகள் குறித்த பட்டியலை தனியார் நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ளது. தொடர்ந்து 5வது ஆண்டாக இந்தியா முதலிடத்தில் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டில் 187 உலகளாவிய இணைய முடக்கங்கள் ஏற்பட்ட நிலையில் அதில் 84 முறை இணைய முடக்கம் இந்தியாவில் தான் […]

You May Like