படகுகள் மூலம் இங்கிலாந்துக்குள் வந்தால் தஞ்சம் அடைந்து விடலாம் என நினைத்து வராதீர்கள். இனி இங்கே அதற்கு இடமில்லை என்று அந்நாட்டு பிரதமர் ரிஷி சுனக் அதிரடியாக அறிவித்துள்ளார்.
இங்கிலாந்து பிரதமராக இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் உள்ளார். இங்கிலாந்து நாட்டுக்குள் சட்டவிரோதமாக பலர் குடியேறுவது வழக்கம். ஒரு குறிப்பிட்ட வருடங்கள் கடந்தால் அவர்களுக்கு இங்கிலாந்து நாட்டு குடியுரிமை வழங்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக லண்டனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் ரிஷி சுனக், இங்கிலாந்தில் நிறைவேற்றப்பட வேண்டிய முக்கிய உத்தரவுகளில் டாப் 5 இடத்தில் இருப்பது சட்டவிரோத குடியேற்றத்திற்கு நிரந்தர தடை விதிப்பது தான் எனவும் கூறியுள்ளர். மேலும், சில நீர்நிலைகளில் படகுகள் மூலம் வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், படகுகள் மூலம் இங்கிலாந்துக்குள் வந்தால் தஞ்சம் அடைந்து விடலாம் என நினைத்து வராதீர்கள். இனி இங்கே அதற்கு இடமில்லை. அவர்கள் திருப்பி அந்த நாட்டிற்கு அனுப்பப்படுவர் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.