திமுக ஆட்சியை அகற்ற சாதி, மத கலவரங்களை ஏற்படுத்த சிலர் சதி செய்து வருவதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளர்..
நாகர்கோவிலில் உள்ள குமரி மாவட்ட திமுக அலுவலகத்தில் கருணாநிதி முழு உருவச்சிலையை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.. இதை தொடர்ந்து பேசிய அவர் “ திராவிட மாடல் என்று சொல்லி, மக்களை கவரக்கூடிய வகையில் ஆட்சி நடத்தி கொண்டிருக்கிறார்கள்.. எனவே தொடர்ந்து இந்த ஆட்சியை விட்டால் என்ன ஆவது என்று நினைக்கும் சிலர் நம் மீது புழுதியை வாரி தூற்றிக் கொண்டிருக்கிறார்கள்.. இந்த ஆட்சியை எப்படியாவது அகற்ற வேண்டும் என்று பல்வேறு திட்டங்களை தீட்டிக் கொண்டுள்ளனர்.. எங்காவது ஜாதி, மத கலவரத்தை ஏற்படுத்தலாமா, மக்களிடையே பிளவுகளை ஏற்படுத்தலாமா என்று திட்டமிட்டு வருகின்றனர்..
விரைவில் நாடாளுமன்ற தேர்தலை எதிர்நோக்கி காத்திருக்கிறோம்.. தமிழ்நாட்டை பொறுத்தவரை மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி அமைத்துள்ளோம்.. சட்டமன்ற தேர்தல், நாடாளுமன்ற தேர்தல், உள்ளாட்சி தேர்தல், அண்மையில் நடந்த இடைத்தேர்தல் வரை தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறோம்.. எனவே இதை அவர்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை..
தமிழ்நாட்டை பொறுத்த வரை, கூட்டணி சிறப்பாக உள்ளது.. தமிழ்நாட்டை மட்டுமல்ல, நாட்டை நாம் காப்பாற்ற வேண்டும்.. அப்படி நாட்டை காப்பாற்ற வேண்டுமெனில், நாடு முழுவதும் உள்ள மதச்சார்பற்ற தலைவர்கள் ஒன்று சேர்ந்து, ஒற்றுமையுடன் தேர்தல் களத்தில் ஈடுபட வேண்டும்.. அதை செய்தால் இந்தியாவை காப்பாற்ற முடியும்.. அதே உணர்வோடு எனது கடமையை ஆற்றிக் கொண்டிருக்கிறேன்.. ஆற்றப் போகிறேன்.. ” என்று தெரிவித்தார்…