பிரதான் மந்திரி க்ரிஷி சம்மன் நிதி யோஜனா திட்டத்திற்கு மாநில அரசின் பங்களிப்பாக ஒரு விவசாயிக்கு ஆண்டுக்கு ரூ.6,000 வழங்கப்படும்.
மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், பட்ஜெட் 2023 ஐ தாக்கல் செய்தார். மாநில பட்ஜெட் தாக்கலின் போது, பட்னாவிஸ், பிரதான் மந்திரி க்ரிஷி சம்மன் நிதி யோஜனா திட்டத்திற்கு மாநில அரசின் பங்களிப்பாக ஒரு விவசாயிக்கு ஆண்டுக்கு ரூ.6,000 வழங்கப்படும். மீதமுள்ள 6,000 ரூபாயை பயனாளிகளின் குடும்பங்களுக்கு மத்திய அரசு வழங்கும் என்றும் அவர் கூறினார்.
இந்த முறை, மகாராஷ்டிரா பட்ஜெட் 2023 நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் உள்ள நடுத்தர வர்க்கத்தினரையும், அடுத்த ஆண்டு மக்களவை மற்றும் உள்ளாட்சி தேர்தல்களுக்கு முன்னதாக வாக்காளர்களைக் கவரும் வகையில் இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார்.