fbpx

“ டயர் வெடிப்பது, மனித அலட்சியம்.. கடவுளின் செயல் அல்ல..” இன்சூரன்ஸ் நிறுவனத்தின் மனுவை நிராகரித்த உயர்நீதிமன்றம்

டயர் வெடிப்பது கடவுளின் செயல் அல்ல, மனித அலட்சியம் என்று கூறிய மும்பை உயர் நீதிமன்றம், கார் விபத்தில் இறந்தவரின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்குவதை எதிர்த்து காப்பீட்டு நிறுவனம் தாக்கல் செய்த மனுவை நிராகரித்தது.

அக்டோபர் 25, 2010 அன்று, மகரந்த் பட்வர்தன் (38)என்பவர் தனது இரண்டு சக ஊழியர்களுடன் புனேவிலிருந்து மும்பைக்கு பயணம் செய்தார். அந்த சக ஊழியர் அதிவேகமாகவும், அலட்சியமாகவும் வேகமாகச் சென்றதால், பின் சக்கரம் வெடித்து, ஆழமான பள்ளத்தில் கார் விழுந்ததில், மகரந்த் பட்வர்தன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மகரந்த் பட்வர்தனின் குடும்பத்திற்கு ரூ.1.25 கோடி வழங்க வேண்டும் என்று மோட்டார் விபத்து உரிமைகோரல் தீர்ப்பாயம் கடந்த 2016-ம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது..

இந்நிலையில் இந்த தீர்ப்பை எதிர்த்து நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் கம்பெனி லிமிடெட் நிறுவனம், மும்பை உயர்நீதிமன்றத்தில், மேல்முறையீட்டு மனு ஒன்றை தாக்கல் செய்தது.. இந்த மனு நீதிபதி எஸ்.ஜி.டிகே தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.. அப்போது காப்பீட்டு நிறுவனம் தரப்பு வழக்கறிஞர், இழப்பீட்டுத் தொகை அபரிமிதமானது மற்றும் அதிகப்படியானது என்றும் டயர் வெடித்தது கடவுளின் செயல் என்றும் டிரைவரின் அலட்சியத்தால் அல்ல என்றும் கூறியது.

ஆனால் காப்பீட்டு நிறுவனத்தின் இந்த வாதத்தை ஏற்க மறுத்த உயர்நீதிமன்றம் டயர் வெடிப்பதை கடவுளின் செயல் என்று சொல்ல முடியாது. இது மனித அலட்சியத்தின் செயல்” என்று கூறியது. மேலும் “ டயர் வெடிப்பதற்கு அதிவேகம், குறைந்த காற்றோட்டம், அதிக காற்றோட்டம் அல்லது செகண்ட் ஹாண்ட் டயர்கள் மற்றும் வெப்பநிலை போன்ற பல்வேறு காரணங்கள் உள்ளன.

வாகனத்தின் ஓட்டுநர் அல்லது உரிமையாளர் பயணம் செய்வதற்கு முன் டயரின் நிலையை சரிபார்க்க வேண்டும். டயர் வெடிப்பதை இயற்கையான செயல் என்று கூற முடியாது. இது மனித அலட்சியம்” என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது. வெறுமனே டயர் வெடித்தது கடவுளின் செயல் என்று கூறி, காப்பீட்டு நிறுவனம் இழப்பீடு வழங்காமல் இருக்க முடியாது என்று கூறி, அந்நிறுவனத்தின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது..

Maha

Next Post

வட மாநில தொழிலாளர் சர்ச்சை.. வதந்தி வீடியோ வெளியிட்ட ஜார்கண்ட் இளைஞர் கைது..

Sun Mar 12 , 2023
வட மாநில தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்பிய வழக்கில் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த பிரசாந்த் குமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.. தமிழகத்தில் வேலை செய்து வரும் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு வதந்தி பரவியது. இதுதொடர்பாக பல்வேறு போலி வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரப்புவோருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம் […]
ட்ரீட் கொடுப்பதாகக் கூறி இளம்பெண்ணை நண்பர்களுடன் சேர்ந்து பலாத்காரம் செய்த ஆட்டோ ஓட்டுநர்..!! திருவள்ளூரில் அதிர்ச்சி..!!

You May Like