fbpx

உடல் சூட்டை குறைக்க உதவும் வெள்ளரிக்காய்!… அதிகமாக எடுத்துக்கொண்டால் ஆபத்து!… அறிவியல் கூறும் உண்மை!…

பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் கொண்ட வெள்ளரிக்காயை அதிகமாக சாப்பிட்டால், நீரிழப்பு, வயிற்று பிரச்சனை உள்ளிட்டவைகள் ஏற்படும் என்று தெரியவந்துள்ளது.

கோடைக்காலங்களில் மக்கள் தங்கள் உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ளவும் அதேவேளையில் ஆரோக்கியமாக இருக்கவும் பல்வேறு பானங்கள் மற்றும் பழங்கள் காய்கறிகளை உணவில் சேர்த்துவருகின்றனர். அந்தவகையில் வெயிலின் தாக்கத்தில் இருந்து காக்க மக்களுக்காக ஆங்காங்கே சாலையோரங்களில் வெள்ளரிக்காய் விற்பனை செய்யப்பட்டுவருகிறது. வைட்டமின் கே மற்றும் ஆன்டி ஆக்சிடன்டுகள் நிறைந்த வெள்ளிரிக்காயை மக்களும் அதிகளவில் விரும்பி சாப்பிடுகின்றனர். இதனால் நன்மைகள் பல இருந்தாலும், அதிகளவில் எடுத்துக்கொண்டால் பல்வேறு பக்க விளைவுகளும் ஏற்படுகின்றன.

அதாவது இரவு நேரங்களில், வெள்ளரிக்காய் சாப்பிட்டால் நல்ல ஆரோக்கியமான உடலை கொண்டவராக இருந்தாலும் தூக்க சுழற்சியை பாதிக்கும் என்பது அறிவியலில் கூறப்பட்டுள்ளது.இரவில் வெள்ளரிக்காயை சாப்பிடுவதாக இருந்தால், தூங்கச் செல்வதற்கு 3 மணி நேரத்திற்கு முன்னதாக சாப்பிடுவது தூக்கத்தை தொந்தரவு செய்யாது.வெள்ளரி விதையில் இருக்கும் மூலபொருளான குக்குர்பிட்டின், டையூரிடிக் எனற பணப்பை கொண்டுள்ளது. இது அளவுக்கு அதிகமாக நம் உடலில் சேரும் போது சமநிலை பாதிக்கப்பட்டு நீரிழப்பு ஏற்படுகிறது.

மேலும், வெள்ளரி விதையிலிருக்கும் குக்குர்பிட்டின், அவர்களது ஜீரண மண்டலம் செய்யக்கூடிய செரிமான செயல்முறையை பாதித்து, வாயு மற்றும் வயிறு உப்புவது போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். சைனஸ் பிரச்சனை உள்ளவர்கள் வெள்ளரிக்காயை சாப்பிட்டால் இதன் விளைவு இன்னும் கடுமையாகிவிடும் எனவே, பிரச்சனை உள்ளவர்கள் தங்கள் மருத்துவர்களின் ஆலோசனையை கேட்ட பிறகு சாப்பிடுவதே நல்லது.

Kokila

Next Post

இன்று முதல் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடக்கம்...! இதையெல்லாம் கட்டாயம் பின்பற்ற வேண்டும்...!

Tue Mar 14 , 2023
தமிழகத்தில் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று முதல் நடைபெற உள்ளது. தேர்வுப் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. பறக்கும்படையில் பணியில் அமர்த்தப்படும் ஆசிரியர்கள், பணியின்போது தேர்வர்கள் அச்சமுறும் வகையில் செயல்படக்கூடாது. தேர்வு மையத்தில் யாரும் செல்போன் பயன்படுத்தக் கூடாது. தேர்வு கண்காணிப்பு பணியில் ஈடுபடும் அலுவலர்களும் செல்போன் பயன்டுத்த கூடாது. செல்போன்களை அணைத்து, தேர்வு மையத்திற்கான கட்டுப்பாட்டு அறையில் வைத்து விட்டு செல்ல வேண்டும். அதனையும் மீறி தேர்வு […]

You May Like