fbpx

மூத்த குடிமக்களுக்கு ஷாக் நியூஸ்.. டிக்கெட் கட்டணத்தில் சலுகை கிடையாது.. ரயில்வே வெளியிட்ட தகவல்..

கொரோனா தொற்றுநோய்க்கு முன்பு, 60 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு ரயில் டிக்கெட்டுகளில் 40 சதவீதம் தள்ளுபடி கிடைத்தது. 58 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு 50 சதவீதம் தள்ளுபடி கிடைத்தது.. ரயில் டிக்கெட்டுகளில் இந்தச் சலுகைகள் அஞ்சல்/எக்ஸ்பிரஸ்/ராஜ்தானி/ சதாப்தி/துரண்டோ ஆகிய ரயில்களின் அனைத்து வகுப்புகளுக்கும் வழங்கப்பட்டன, ஆனால் கொரோனா பெருந்தொற்று காரணமாக சலுகை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்டது. இதனிடையே மூத்த குடிமக்களுக்கு, இந்த சலுகையை மீண்டும் வழங்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்தனர்.. ஆனால் மூத்த குடிமக்களுக்கு வழங்கப்படும் டிக்கெட் கட்டண சலுகை இனி கிடைக்காது என்று ரயில்வே அமைச்சர் கூறியிருந்தார்..

இந்நிலையில் ரயில் பயணங்களில், கொரோனாவுக்கு முன்பு இருந்தபடி, மூத்த குடிமக்களுக்கு வழங்கிய கட்டணச் சலுகையை மீண்டும் தொடங்க நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைத்தது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பாஜக எம்பி ராதா மோகன் சிங் தலைமையிலான ரயில்வேக்கான நிலைக்குழு நேற்று தனது அறிக்கையை தாக்கல் செய்தது.. அந்த அறிக்கையில் மூத்த குடிமக்களுக்கு ரயில் கட்டணத்தில் சலுகை வழங்க பரிந்துரை செய்துள்ளது.

ரயில்வேக்கான நிலைக்குழுவின் பரிந்துரையில் “ ரயில்வே வழங்கிய தகவல்களின்படி, கொரோனா நிலைமை தற்போது இயல்பாக்கப்பட்டுள்ளது.. ரயில் போக்குவரத்து சாதாரண வளர்ச்சியை எட்டியுள்ளது. எனவே கொரோனாவுக்கு முந்தைய காலங்களில் மூத்த குடிமக்களுக்கான சலுகைகளை மதிப்பாய்வு செய்து, குறைந்தபட்சம் ஸ்லீப்பர் கிளாஸ் மற்றும் 3A வகுப்பிலாவது பரிசீலிக்க வேண்டும். பாதிக்கப்படக்கூடிய மற்றும் உண்மையிலேயே தேவைப்படும் குடிமக்கள் இந்த வகுப்புகளில் வசதியைப் பெறலாம்.

எனவே, மூத்த குடிமக்களுக்கு குறிப்பாக ஸ்லீப்பர் வகுப்பு மற்றும் 3A வகுப்பில் உள்ள கட்டணங்களில் சலுகைகளை மீண்டும் தொடங்குவதற்கு ரயில்வே கனிவுடன் பரிசீலிக்க வேண்டும்..” என்று தெரிவித்துள்ளது.. எனினும், இந்த சலுகையை மீண்டும் தொடங்குவதற்கான உடனடி திட்டம் எதுவும் இல்லை என்று ரயில்வே தெரிவித்துள்ளது. ஏற்கனவே 50-55 சதவீத சலுகை அனைத்து பயணிகளுக்கும் வழங்கப்படுவதாகவும் ரயில்வே தெரிவித்துள்ளது..

இதனிடையே இந்திய ரயில்வே குடிமக்களுக்கு வழங்கும் 53 சலுகைகளால் ரூ.2,000 கோடி நஷ்டம் அடைந்தள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் மூத்த குடிமக்களுக்கான தள்ளுபடி மட்டுமே மொத்த சலுகைகளில் கிட்டத்தட்ட 80 சதவிகிதம் ஆகும். சலுகைகள் நீக்கப்பட்ட இரண்டாண்டு காலத்தில், ரயில்வேக்கு கூடுதலாக ரூ.1,500 கோடி வருவாய் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது..

Maha

Next Post

அடிதூள்...! 20-ம் தேதி தொழிற்பழகுநர்‌ சேர்க்கை முகாம்‌...! இளைஞர்களுக்கு சூப்பர் வாய்ப்பு...!

Tue Mar 14 , 2023
தருமபுரி அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில்‌ வரும்‌ 20.03.2023 அன்று காலை 9.00 மணி முதல்‌ 4.00 மணிவரை பிரதம மந்திரி தேசிய தொழிற்பழகுநர்‌ சேர்க்கை முகாம்‌ நடைபெறவுள்ளது. இம்முகாமில்‌ தருமபுரி மாவட்டத்தில்‌ உள்ள பொதுத்துறை மற்றும்‌ முன்னணி தனியார்‌ நிறுவனங்கள்‌ கலந்துக்கொண்டு தொழிற்பழகுநர்‌ பயிற்சிக்கு ஐ.டி.ஐ தேர்ச்சி பெற்றவர்களை தேர்வுசெய்ய உள்ளனர்‌. NCVA/SCVT ஐ.டி.ஐ பயிற்சி பெற்று தேர்ச்சி பெற்ற பயிற்சியாளர்கள்‌ மற்றும்‌ ஐ.டி.ஐ ல்‌ கடந்த ஆண்டு […]

You May Like