தருமபுரியில் பென்னாகரம் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 2 பெண்கள் உயரிழந்தனர்..
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த, நாகதாசம்பட்டியில் சரவணன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை ஒன்று இயங்கி வருகிறது.. இந்த பட்டாசு ஆலையில் இன்று காலை வழக்கம் பொல் ஊழியர்கள் பணிபுரிந்து வந்தனர்.. இந்நிலையில் அந்த பட்டாசு ஆலையில் இன்று எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டது.. இதையடுத்து காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது..
இந்த தீ விபத்தில் அங்கு வேலை பார்த்து வந்த பழனியம்மாள், முனியம்மாள் ஆகிய 2 பேர் உயிரிழந்தனர்.. மேலும் இந்த விபத்தில் படுகாயமடைந்த சிவசக்தி என்ற பெண் சிகிச்சைக்காக, தருமபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.. மேலும் தீ விபத்து ஏற்பட்ட பட்டாசு ஆலையில் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.. இந்த தீ விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..