fbpx

சூப்பர் நியூஸ்…! 10 சதவீதம் கூலி உயர்வு… ஏப்ரல் 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிப்பு…!

கதர் உற்பத்தியாளர்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக கதர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், கதர் மற்றும் கிராமத் தொழில்துறை ஆணையம் மூலம் மத்திய குறு, சிறு நடுத்தரத் தொழில்துறை அமைச்சகம் பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி வருகிறது.

கதர் தொழில்துறையைச் சேர்ந்த பருத்தி, கம்பளி, பாலிவஸ்த்ரா ஆகியவற்றுக்கு மாற்றியமைக்கப்பட்ட சந்தை மேம்பாட்டு உதவி திட்டதில் 35 சதவீதம் அளவிற்கு ஊக்கத்தொகை கதர் உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்படுகிறது. 30 சதவீதம் ஊக்கத்தொகை பட்டு உற்பத்திக்கு அளிக்கப்படுகிறது.

தனிநபர்களுக்கும் குழுக்களுக்கும் பணிச்சூழலை எளிதாக்கும் வகையில், கூடாரம் கட்டுவதற்கும் நிதியுதவி வழங்கப்படுகிறது. ஒரு நூல் சுற்றுக்கு அளிக்கப்பட்டு வந்த நூற்பு கூலி ரூ.7.50-லிருந்து ரூ.10-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. பருத்தி கதர், பருத்தி கம்பளி, பாலிவஸ்த்ரா நூற்புகளுக்கான கூலி 10 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த ஊதிய உயர்வு 1.4.2023 முதல் அமலுக்கு வருகிறது.

Vignesh

Next Post

மகளின் தோழியை தொந்தரவு செய்த தந்தை….! இறுதியில் தோழி எடுத்த அதிரடி முடிவு…..!

Sat Mar 18 , 2023
ஆக்ராவில் தன்னுடைய தோழியின் தந்தை தொலைபேசியின் மூலமாக துன்புறுத்து அதன் காரணமாக மைனர் பின் ஒருவர் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இந்த சம்பவம் கடந்த 13 ஆம் தேதி எட்மத்பூர் நகரில் நடைபெற்றுள்ளது. உயிரிழந்தவரின் தந்தையின் கருத்தின் அடிப்படையில் ராகவேந்திரா சிங் சவுகான் என்ற நபர் தன்னுடைய மகளை துன்புறுத்துவதை வழக்கமாக கொண்டு வந்திருக்கிறார். தன்னுடைய புகாரில் அந்த சிறுமியின் தந்தை ஜவஹான் தொலைபேசியில் ஆபாசமாக பேசுவதாகவும் இது தொடர்பாக […]

You May Like