மோட்டார் வாகனச் சட்டம் 2019ன் கீழ், கார் உரிமையாளர்கள் தங்கள் காப்பீட்டைப் புதுப்பித்து, வழக்கமான மாசுக் கட்டுப்பாட்டுச் சான்றிதழைப் பெற வேண்டும்.. இல்லை எனில் கடுமையான அபராதம் விதிக்கப்படும்.. புதிய மோட்டார் வாகனச் சட்டம் 2019ன் படி, பியுசி சான்றிதழைப் பெறத் தவறினால், 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.. எனவே வாகன ஓட்டிகள் பியுசி மையத்தில் தடையில்லா சான்றிதழை பெற வேண்டும்.. இந்த கடுமையான மோட்டார் வாகன விதிமுறைகள் ஒரு சிலருக்கு சிரமத்தை ஏற்படுத்தும் என்றாலும், மற்றவர்கள் பியுசி மையம் மூலம், வேலைவாய்ப்பை வழங்குவதற்கான எளிதான வழியாகும். ஒருமுறை ரூ.10,000 முதலீடு செய்வதன் மூலம் ஒரு நாளைக்கு 5,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்..
ஆனால் நாட்டில் தற்போது PUC என்று அழைக்கப்படும், மாசுக்கட்டுப்பாட்டு மையங்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது.. எனவே, PUC மையம் ஒரு வேலையில்லாத நபருக்கு சுயவேலைவாய்ப்பாக வளர்ந்துள்ளது. ஏனெனில் இதற்கு ரூ. 10,000 முதலீடு மட்டுமே தேவைப்படுகிறது மற்றும் ரூ. 5,000 வரை தினசரி வருமானம் பெறுவதற்கான வாய்ப்பை வழங்குகிறது.
PUC மையத்தை நிறுவுவதற்கான படிப்படியான வழிகாட்டி :
- PUC மையத்தை நிறுவ, உரிமத்திற்கான விண்ணப்பத்தை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் (RTO) சமர்ப்பிக்கவும்.
- ஒருவர் தங்கள் முகவரியிலிருந்து அருகிலுள்ள RTO அலுவலகத்திற்கு விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.. அவர்கள் முகவரி சான்றை கட்டாயம் வைத்திருக்க வேண்டும்..
- பெட்ரோல் நிலையம் அல்லது கார் பழுதுபார்க்கும் கடைக்கு அருகில் பியூசி மையம் அமைக்கலாம்
- உங்கள் பதிவு விண்ணப்பத்துடன் ரூ.10 உறுதிமொழிப் பத்திரத்தைச் சேர்க்கவும்
- அறிவிப்பில் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைச் சேர்க்கவும்
- நகராட்சியிடம் தடையில்லா சான்றிதழ் பெறவும்
- PUC சென்டர் உரிமம் வழங்குவதற்கான செலவு அதிகார வரம்பைப் பொறுத்து மாறுபடும்
- ஆன்லைன் PUC மைய உரிம விண்ணப்பங்கள் சில அதிகார வரம்புகளில் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.
- பியுசி மையத்திற்கு ஆன்லைனில் பதிவு செய்ய, vahan.parivahan.gov.in/puc என்ற இணையதளத்திற்குச் சென்று உள்நுழையவும்.
மேலே குறிப்பிட்டுள்ளபடி, PUC சென்டர் உரிமத்திற்கு பல்வேறு மாநிலங்கள் வெவ்வேறு கட்டணங்களை வசூலிக்கின்றன.
விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் : 2.5m X 2.0m x 2.0m பரிமாணங்களைக் கொண்ட ஒரு மஞ்சள் கேபின், PUC சென்டர் முதலில் திறக்கும் போது இருக்க வேண்டும். PUC மையம் அதன் பதிவு எண்ணை வாடிக்கையாளர்களுக்குத் தெரிய வைக்க வேண்டும். ஆட்டோமோட்டிவ் இன்ஜினியரிங், மோட்டார் மெக்கானிக்ஸ், ஆட்டோ மெக்கானிக்ஸ், ஸ்கூட்டர் மெக்கானிக்ஸ் அல்லது ஐடிஐ ஆகியவற்றில் பொறியியல் பட்டம் பெற்ற ஒருவர் மட்டுமே PUC மையத்தைத் திறக்க முடியும்.
வருமானம் : வாகன உரிமையாளர்களுக்கு மாசு சான்றிதழ் வழங்கும்போது, 2 ரூபாய் மட்டுமே செலவாகும் அரசு ஸ்டிக்கர் கண்டிப்பாக இணைக்கப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஸ்டிக்கர்களை வாங்குவதற்கு, பியூசி சென்டர் உரிமையாளர் ரூ.2 அரசுக்கு வழங்க வேண்டும். மாசு சான்றிதழ் கட்டணத்திற்கான மீதி பணம் முழுவதுமாக உரிமையாளரின் வருமானமாக மாறும். ஒரு வாகன உரிமையாளர் PUC மையத்தில் தடையில்லா சான்றிதழ் பெற ரூ.20 முதல் ரூ.200 வரை செலுத்தலாம். எனவே, பியுசி சென்டர் உரிமையாளர் ஒரு நாளைக்கு 50 கார்களுக்கு மாசு சான்றிதழ் வழங்கினால் குறைந்தது ரூ.5,000 சம்பாதிக்க முடியும்.