பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தின் தொடர்ந்து பல பிரச்சினைகள் நடைபெற்று வருகின்றன. கடந்த வார ஒளிபரப்பான எபிசோடில் கூட தன்னுடைய அண்ணன் மூர்த்தி கல்லாப்பெட்டியை பூட்டி வைத்து விட்டதால் தன்னுடைய அண்ணன் மூர்த்தி மீது கடுமையான கோபத்தில் உரையாற்றினார் ஜீவா.
இந்த நிலையில், தற்சமயம் மீனா வீட்டில் நடக்கும் திருமணத்திற்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர் எல்லோரும் சென்று இருக்கிறார்கள்.
இந்த திருமண விழாவில் எல்லோரும் தனித்தனியே மொய் வைத்திருக்கிறார்கள்.இதில் ஜீவாவின் பெயர் மட்டும் விடுபட்டுவிட்டது.
சென்னை எல்லோரும் மறந்து விட்டார்கள் என்று கோபத்துடன் தன்னுடைய அண்ணன் மூர்த்தியிடம் பேசுகின்றார். இனி நான் உங்க தம்பி இல்லை என்னை மறந்து விட்டீர்கள் அல்லவா? இனி நான் உங்க வீட்டிற்கு வர மாட்டேன் என்று தெரிவித்துவிட்டார்.
இதன் காரணமாக, பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் இரண்டாக உடைய போகிறது என்று எல்லோரும் தெரிவித்து வருகிறார்கள். என்ன நடக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். அந்த ப்ரோமோ தற்சமயம் வெளியாகியிருக்கிறது.