பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு இமெயிலில் கொலை மிரட்டல்! காவல்துறை பலத்த பாதுகாப்பு!

பாலிவுட்டின் சூப்பர் ஸ்டாரில் ஒருவர் சல்மான் கான். இவர் இந்திய சினிமாவின் மிகப்பெரிய நட்சத்திரங்களில் ஒருவர். சில ஆண்டுகளுக்கு முன்பு ராஜஸ்தானில் மானை வேட்டையாடிய வழக்கில் கைது செய்யப்பட்ட இவருக்கு நீதிமன்றம் தண்டனை வழங்கியது. இந்நிலையில் அந்த சம்பவம் தொடர்பாக பிரபல ரவுடிகளான லாரன்ஸ் பிஷ்னோய் மற்றும் கோல்டி பிரார் ஆகியோர் சல்மான் கான் இருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக சல்மான் கானின் மேனேஜரான பிரசாந்த் குஞ்சல்கர் மின்னஞ்சலுக்கு ரோஹித் கார்க் என்பவர் மின்னஞ்சல் அனுப்பி இருக்கிறார். அந்த மின்னஞ்சலில் கோல்டி ப்ரார் உங்கள் முதலாளியுடன் பேச விரும்புகிறார். இந்த முறை நாங்கள் சரியான நேரத்தில் உங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பி இருக்கிறோம். அடுத்த முறை நீங்கள் அதிர்ச்சி அடைவீர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் லாரன்ஸ் பிஷ்னோய் சமீபத்தில் பேசிய வீடியோவை பார்க்க வேண்டும் எனவும் அந்த மின்னஞ்சலில் குறிப்பிடப்பட்டுள்ளது.


இது தொடர்பாக பிரசாந்த் குஞ்சல்கர் பாந்த்ரா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரை தொடர்ந்து கோல்டி ப்ரார் மற்றும் லாரன்ஸ் பிஷ்னோய் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தது காவல்துறை. மேலும் சல்மான் கான் வீட்டிற்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பிரபல ரவுடிகளான லாரன்ஸ் பிஷ்னோய் மற்றும் கோல்டி ப்ரார் ஆகியோர் பஞ்சாப் பாடகரான சித்து கோல்ட் வாலா கொலை வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகள் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபுத்திய வீடியோ ஒன்றில் லாரன்ஸ் பிஷ்னோய் “பிளாக்பக் மானை வேட்டையாடி சல்மான் கான் எங்கள் இனத்தை அவமதித்துவிட்டார் அதனால் அவரை கொலை செய்வதே என் வாழ்க்கையின் மிகப்பெரிய இலக்கு” என தெரிவித்திருந்தார். தற்போது இந்த மின்னஞ்சல் மூலமாக மறைமுகமாக கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது.

1newsnationuser5

Next Post

ரயில் நிலைய டிவியில் ஒளிபரப்பான ஆபாச படம்..!! தெறித்து ஓடிய பயணிகள்..!! அதிர்ச்சி சம்பவம்..!!

Mon Mar 20 , 2023
பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள ரயில் நிலையம் பயணிகள் வருகை அதிகம் காணப்படும் முக்கிய ரயில் நிலையமாக உள்ளது. அங்கு வைக்கப்பட்டுள்ள ஒரு டிவியில் ஞாயிற்றுக்கிழமை காலை ஆபாச வீடியோ ஒளிபரப்பாகியுள்ளது. விளம்பரத்திற்காக 10-வது நடைமேடையில் பொருத்தப்பட்டிருக்கும் டிவி ஒன்றில் காலை 9.30 மணியளவில், ஆபாச வீடியோ ஒளிப்பரப்பானது. சுமார் 3 நிமிடங்கள் ஒளிபரப்பான ஆபாச வீடியோவைக் கண்ட பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். சில பயணிகள் பொது இடத்தில் ஆபாச […]
889064 railway stations

You May Like