நாட்டில் தற்போதுள்ள நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளுக்குப் பதிலாக ஜிபிஎஸ் அடிப்படையிலான சுங்கவரி வசூலிப்பு முறை உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்களை மத்திய அரசு அறிமுகம் செய்ய உள்ளது. அடுத்த 6 மாதங்களில் இந்த புதிய தொழில்நுட்பம் நடைமுறை வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், நெடுஞ்சாலைகளில் பயணித்த சரியான தூரத்திற்கு வாகன ஓட்டிகளிடம் கட்டணம் வசூலிக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம், வாகனங்களை நிறுத்தாமல் தானியங்கி முறையில் சுங்கவரி வசூலிக்கும் வகையில் தானியங்கி நம்பர் பிளேட் ரெகக்னிஷன் சிஸ்டம் என்ற (ANPR – automatic number plate reader cameras- தானியங்கி நம்பர் பிளேட் ரீடர் கேமராக்கள்) ஒரு முன்னோடி திட்டத்தை நடத்தி வருகிறது.

ஜிபிஎஸ் அடிப்படையிலான கட்டண வசூல் அமைப்புகள் எவ்வாறு செயல்படும்.. ஜிபிஎஸ் அடிப்படையிலான சுங்க வரி வசூலிப்பின் கீழ், நெடுஞ்சாலைகளில் வாகனங்களின் இயக்கத்தைக் கண்காணிக்கும் சாதனம் வாகனங்களில் பொருத்தப்பட வேண்டும். அத்தகைய வாகனம் கட்டணம் செலுத்தப்பட்ட சாலையில் நுழைந்தவுடன், நெடுஞ்சாலை அமைப்பு வாகனத்தை கண்காணிக்கும்.. மேலும் நெடுஞ்சாலையில் இருந்து வெளியேறும் இடத்தில் பயணித்த தூரத்தின் அடிப்படையில் கட்டணம் வசூலிக்கப்படும்.
இந்த அமைப்பின் கீழ், ஒரு பயனர் தங்களது விவரங்களையும், தங்கள் வாகனத்தின் விவரங்களையும் வங்கிக் கணக்குகளுடன் பதிவு செய்ய வேண்டும்.. இது சுங்கக் கட்டணத்தை மாற்ற பயன்படும். தற்போதுள்ள சுங்கச்சாவடிகளில் உள்ளதைப் போல நிலையான கட்டணங்கள் அல்லாமல் பயணித்த உண்மையான தூரத்தில் வாகனங்கள் வசூலிக்கப்படும் என்பதால், இந்த அமைப்பு சுங்கக் கட்டணம் குறையக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜிபிஎஸ்-அடிப்படையிலான அமைப்பு உள்ளூர் குடியிருப்பு அனுமதிச்சீட்டுகள் அல்லது நெடுஞ்சாலைகளில் பயணம் செய்வதற்கான பிற சலுகைகளை திரும்பப் பெறவும் முன்மொழியப்பட்டுள்ளது.
தானியங்கி நம்பர் பிளேட் அங்கீகார அமைப்பு எவ்வாறு செயல்படும்..? காரின் நம்பர் பிளேட் ANPR கேமராக்களின் மூலம் கண்காணிக்கப்படும்.. பின்னர் அது வாகன உரிமையாளரின் தொடர்புடைய வங்கிக் கணக்கிலிருந்து சுங்கக் கட்டணம் செலுத்தப்படும். இந்த அமைப்பு ANPR கேமராக்களை நுழைவு மற்றும் வெளியேறும் இடங்களில் நிறுவி, கடந்து செல்லும் வாகனங்களின் உரிமத் தகடுகளை படம் பிடிக்கும். ANPR கேமராவைப் பயன்படுத்தி கார் உரிமையாளரின் தொடர்புடைய வங்கிக் கணக்கிலிருந்து கட்டணத் தொகையைக் கழிக்க அறிவுறுத்தப்படும்.
சுங்கச்சாவடிகளில் சராசரி காத்திருப்பு நேரம் : 2018-19 ஆம் ஆண்டில், சுங்கச்சாவடியில் வாகனங்களுக்கான சராசரி காத்திருப்பு நேரம் 8 நிமிடங்களாக இருந்தது. 2020-21 மற்றும் 2021-22 ஆம் ஆண்டுகளில் FASTags அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம், வாகனங்களின் சராசரி காத்திருப்பு நேரம் 47 வினாடிகளாகக் குறைந்துள்ளது. குறிப்பிட்ட இடங்களில், குறிப்பாக நகரங்களுக்கு அருகில் காத்திருப்பு நேரத்தில் கணிசமான முன்னேற்றம் காணப்பட்டாலும், அதிக மக்கள் தொகை கொண்ட நகரங்களில், குறிப்பாக நெரிசலான நேரத்தின் போது சுங்கச்சாவடிகளில் தாமதம் ஏற்படுகிறது.
தற்போது, ஒரு சுங்கச்சாவடியிலிருந்து மற்றொரு சுங்கச்சாவடிக்கு உள்ள முழு தூரத்திற்கும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஒரு வாகனம் முழு தூரத்தையும் பயணிக்காமல், வேறு இடத்தில் பயணத்தை முடித்துக் கொண்டாலும், கட்டணம் முழுமையாக செலுத்தப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது..