குஜராத்தை சார்ந்த 17 வயது சிறுமி தன்னுடைய உறவுக்கார பையனால் குத்தி படுகாயப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. குஜராத் மாநிலத்தின் ராஜ்கோட் நகரில் உள்ள ஜூனாகத் மாவட்டத்தில் இந்தக் கொடூர சம்பவம் நடைபெற்றிருக்கிறது. வீட்டில் தனியாக இருந்த 17 வயது பெண்ணை 23 வயது இளைஞர் ஒருவன் 18 முறை கத்தியால் குத்தி இருக்கிறான். இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த பெண் தற்போது ராஜ்கோட் சிவில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் கிசான் பவாஜி என்ற 23 வயது இளைஞரை கைது செய்துள்ளனர்.
காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் அந்தப் பெண்ணின் உறவினரான கிசான் அந்தப் பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்திருக்கிறார். அந்தப் பெண் இவரை திருமணம் செய்து கொள்ள மறுத்ததோடு இவருடன் பேசுவதையும் தவிர்த்து வந்திருக்கிறார் இதனால் ஆத்திரமடைந்த இளைஞர் அந்தப் பெண்ணின் சகோதரி வீட்டில் இல்லாத நேரம் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரது உடலில் 18 இடங்களில் குத்தியிருக்கிறார். இதனைத் தொடர்ந்து அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இச்சம்பவம் தொடர்பாக வந்த புகாரை அடுத்து காவல்துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அந்தப் பெண் சுயநினைவு இழக்கும் வரை அவரை தொடர்ந்து கத்தியால் குத்தி இருக்கிறார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பயத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.