fbpx

தாயுடன் சேர்ந்து தந்தையை போட்டுத் தள்ளிய மகன்..!! காதல் திருமணத்தால் நேர்ந்த விபரீதம்..!!

பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (47). இவரது மனைவி மலர்கொடி(45) இவர்களுக்கு வெங்கடேஷ் (24) என்ற மகன் உள்ளார். ராமகிருஷ்ணன் வேலைக்கு செல்லாமல், குடி பழக்கத்திற்கும் அடிமையாகி, வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். இவரது மகன் வெங்கடேஷ் பூலாம்பாடியில் உள்ள அவரது பாட்டி வீட்டில் தங்கியிருந்து வந்த நிலையில், தழுதாழை கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இதனையறிந்த ராமகிருஷ்ணன், காதல் திருமணம் செய்து கொண்ட வெங்கடேசனை வீட்டிற்கு வரக்கூடாது என கூறி தகராறு செய்துள்ளார். இவரது மனைவி மலர்க்கொடி மகனுக்கு ஆதரவாக செயல்பட்டுள்ளார். மேலும், இவர்களுக்கு சொந்தமான ஓட்டு வீட்டையும் எழுதி தருமாறு, ராமகிருஷ்ணனிடம் கேட்டுள்ளனர். இதனால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், பூலாம்பாடியில் இருந்து நேற்று பாரதிதாசன் நகரில் உள்ள வீட்டுக்கு வந்த வெங்கடேஷுக்கும், ராமகிருஷ்ணனுக்கு மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், நேற்று காலையில் இருந்து இருவருக்கும் சண்டை நடந்ததால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் யாரும் கண்டுகொள்ளவில்லை.

இந்நிலையில் இவர்களது தகராறில் காயமடைந்த ராமகிருஷ்ணன் வீட்டின் பின்பகுதியில் சரிந்து விழுந்துள்ளார். இதனைத் தொடர்ந்து சண்டையின்போது ஏற்பட்ட சிறிய காயத்திற்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சென்று புற நோயாளியாக சிகிச்சை பெற்ற வெங்கடேஷ் தலைமறைவாகியுள்ளார். அவரை தொடர்ந்து மலர்க்கொடியும் தலைவராகி விட்டார். காலையில் எழுந்து பார்த்த போது ராமகிருஷ்ணன் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தது தெரியவந்துள்ளது. இது குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் நகர போலீசார் விரைந்து சென்று ராமகிருஷ்ணனின் சடலத்தை கைப்பற்றி அவரை கொலை செய்து விட்டு தப்பி ஓடிய அவரது மனைவி மலர்கொடி, மகன் வெங்கடேஷ் ஆகிய இருவரை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Chella

Next Post

உயிரை பணயம் வைத்து வேலை செய்யும் தொழிலாளர்கள்..!! பதைபதைக்கும் வீடியோ காட்சி..!!

Mon Mar 27 , 2023
உலகின் பெரும் பணக்காரர்கள் முதல் சாமானியர்கள் வரை பயன்படுத்தும் ஒவ்வொரு பொருட்களுக்கு பின்னணியிலும் ரத்தத்தையும், வியர்வையையும் சிந்தி உழைக்கும் தொழிலாளியின் பங்கு அளப்பரியதாக இருக்கும். உணவு உள்ளிட்ட மிக அத்தியாவசியமான அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்காக உலகின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள தொழிலாளர் வர்க்கத்தினர் பலரும் தங்கள் உயிரை பணயம் வைத்து உழைத்துக் கொண்டிருக்கின்றனர். குறிப்பாக சுரங்க வேலைகளில் ஈடுபடுவோரின் நிலை மிகவும் பரிதாபத்திற்குரியதாக இருக்கும். ஏனெனில் பூமிக்கு கீழே […]
உயிரை பணயம் வைத்து வேலை செய்யும் தொழிலாளர்கள்..!! பதைபதைக்கும் வீடியோ காட்சி..!!

You May Like