fbpx

தங்கம் விலை இன்றும் குறைவு.. எவ்வளவு தெரியுமா..?

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.44,320க்கு விற்பனையாகிறது..

உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.. இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது.. இந்த நிலையில் அமெரிக்காவில் 2 வங்கிகள் திவாலானதை அடுத்து பாதுகாப்பு கருதி, முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.. இதனால் தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது..

இந்த நிலையில் இன்று தங்கம் விலை குறைந்துள்ளது.. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.5,540க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.44,320க்கு விற்பனையாகிறது.. எனினும் இன்று வெள்ளியின் விலையில் எந்த மாற்றமும் இல்லை.. ஒரு கிராம் வெள்ளி விலை மாற்றமின்றி ரூ.76க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது… இதனால் ஒரு கிலோ வெள்ளி ரூ.76,000க்கு விற்பனையாகிறது.

Maha

Next Post

தாயுடன் சேர்ந்து தந்தையை போட்டுத் தள்ளிய மகன்..!! காதல் திருமணத்தால் நேர்ந்த விபரீதம்..!!

Mon Mar 27 , 2023
பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (47). இவரது மனைவி மலர்கொடி(45) இவர்களுக்கு வெங்கடேஷ் (24) என்ற மகன் உள்ளார். ராமகிருஷ்ணன் வேலைக்கு செல்லாமல், குடி பழக்கத்திற்கும் அடிமையாகி, வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். இவரது மகன் வெங்கடேஷ் பூலாம்பாடியில் உள்ள அவரது பாட்டி வீட்டில் தங்கியிருந்து வந்த நிலையில், தழுதாழை கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனையறிந்த ராமகிருஷ்ணன், காதல் திருமணம் செய்து கொண்ட […]
தாயுடன் சேர்ந்து தந்தையை போட்டுத் தள்ளிய மகன்..!! காதல் திருமணத்தால் நேர்ந்த விபரீதம்..!!

You May Like