வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி இருக்கும் விடுதலை படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
வெற்றிமாறன் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் விடுதலை. இதில், சூரி கதையின் நாயகனாகவும், விஜய் சேதுபதி கதாநாயகனாகவும் நடித்துள்ளார். இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்து உள்ளார். இப்படம் வருகிற மார்ச் 31ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அதற்கான புரமோஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இந்நிலையில், விடுதலை படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அதன்படி, இந்த வீடியோ மூலம் இப்படத்திற்காக படக்குழுவினர் எந்த அளவுக்கு கஷ்டப்பட்டு உள்ளனர் என்பதை கண்முன் கொண்டுவந்து நிறுத்தி உள்ளனர். குறிப்பாக வெற்றிமாறன் ஆக்ரோஷமாக கத்துவதும், சூரி ஆக்ஷன் காட்சிகளில் பயங்கரமாக அடிவாங்கி நடித்துள்ளதும் இந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது.