10ஆம் வகுப்பு செய்முறை தேர்வு..!! மார்ச் 31ஆம் தேதி வரை கால நீட்டிப்பு..!! முக்கிய அறிவிப்பு..!!

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தமிழ்நாடு முழுவதும் ஏப்ரல் 6ஆம் தேதி தொடங்க உள்ளது. மொழிப்பாடத்துடன் துவங்கும் பொதுத்தேர்வுகள் 06.04.2023 முதல் 20.04.2023 வரையிலான நாட்களில் நடைபெற உள்ளதாக அரசு தேர்வுகள் இயக்குனரகம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், சென்னை அரசுத் தேர்வுகள் இயக்கம் 2023 ஆண்டிற்கான 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாகவும் பள்ளி மாணவர்களுக்கான ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்தல் மற்றும் பெயர்ப் பட்டியலில் திருத்தம் மேற்கொள்வது தொடர்பான அறிவிப்பை கடந்த மார்ச் 21ஆம் தேதி வெளியிட்டது. அதன்படி, மாணவர்கள் கடந்த 27ஆம் தேதி ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து தேர்வுக்கு தயாராகினர்.


பொதுத்தேர்வுக்கு முந்தைய செய்முறை தேர்வுகள் நடைபெற்று வந்த நிலையில், 10ஆம் வகுப்பு அறிவியல் பாட செய்முறைத் தேர்வுகள் நேற்றுடன் (28.03.2023) முடிவடைந்தன. இதில் சில மாணவர்கள் கலந்து கொள்ளாத நிலையில், வரும் 31ஆம் தேதி வரை கால நீட்டிப்பு வழங்கி அரசுத் தேர்வுகள் இயக்குநர் உத்தரவிட்டுள்ளது. மாணவர்களின் நலன் கருதி செய்முறை தேர்விற்கு வரும் 31ஆம் தேதி வரை கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த நாட்களில் செய்முறை தேர்விற்கு வருகை புரியாத அனைத்து பள்ளி மாணவர்களும் கலந்து கொள்ள முதன்மை கல்வி அலுவலர்கள் தனி கவனம் செலுத்துமாறு அரசு தேர்வுகள் இயக்குனர் முதன்மை கல்வி அலுவலர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

CHELLA

Next Post

ஜியோ வாடிக்கையாளர்களுக்கு செம குட் நியூஸ்..!! Unlimited இன்டர்நெட்..!! வெறும் ரூ.198 மட்டுமே..!!

Wed Mar 29 , 2023
உலகெங்கும் இருக்கும் கிரிகெட் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் கிரிக்கெட் தொடராக ஐபிஎல் இருக்கிறது. 2008இல் ஐபிஎல் தொடர் ஆரம்பிக்கும் போது, அது இவ்வளவு பெரியளவில் வெற்றியடையும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. 15 சீசன் வெற்றிகரமாக முடிந்துள்ள நிலையில், 16ஆவது சீசன் ஐபிஎல் போட்டி இன்னும் சில நாட்களில் தொடங்க உள்ளது. இதற்கான எதிர்பார்ப்பு இப்போதே அதிகரித்துவிட்டது. ஐபிஎல் 16ஆவது சீசனின் முதல் போட்டி வரும் மார்ச் 31ஆம் தேதி கோலாகலமாகத் […]
jio 2

You May Like