புதிய நாடாளுமன்றம்…..! மக்களை புதிய வளர்ச்சியை நோக்கி அழைத்துச் செல்லட்டும் பிரதமர் நரேந்திரமோடி.,..!

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்து வைத்து மக்களவையில் செங்கோலை நிறுவிய பிரதமர் நரேந்திரமோடி, இதுகுறித்து தன்னுடைய வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில் அவர் தெரிவித்திருப்பதாவது புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறக்கப்பட்டு இருப்பதால் நம்முடைய மனம் பெருமை மற்றும் நம்பிக்கையால் நிறைந்திருக்கிறது. கனவுகளை நினைவாக்கட்டும் இந்த புதிய கட்டிடம் நாட்டை முன்னேற்றத்தின் புதிய உயரத்திற்கு அழைத்துச் செல்லட்டும் என்று பதிவிட்டு இருக்கிறார்.

அதோடு மட்டுமல்லாமல் புதிய நாடாளுமன்ற கட்டிடம் தொடர்பான புகைப்படங்களையும் பிரதமர் இதில் பகிர்ந்து இருக்கிறார்.

Next Post

புதிய நாடாளுமன்றத்தின் அருகே தடுத்து நிறுத்தப்பட்ட போராட்டக்காரர்கள்….! டெல்லியில் பரபரப்பு…..!

Sun May 28 , 2023
இன்றைய தினம் டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழா சர்வ மத பிரார்த்தனைகளுடன் ஆரம்பமானது. புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் அதிகாரப்பூர்வமான நிகழ்ச்சி மதியம் 12:00 மணி அளவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவை முன்னிட்டு தலைநகர் டெல்லியில் காவல்துறையினரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கிறது அசம்பாவிதங்களை தவிர்க்கும் விதத்தில், அதிக எண்ணிக்கையிலான காவல்துறையினர் குவிக்கப்பட்டிருக்கிறார்கள். புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு அழைப்பு […]

You May Like