பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமிற்கான மெட்டாவின் உறுதிப்படுத்தப்பட்ட புளூ டிக் திட்டத்திற்கான சந்தா கட்டணமாக மாதம் ரூ.1,450 செலுத்தவேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ட்விட்டர் நிறுவனத்தை தொடர்ந்து பயனர்களுக்கு ‘ப்ளூ டிக்’ கட்டண சந்தாவை மெட்டா நிறுவனமும் அறிமுகம் செய்தது. ஊடக நிறுவனங்கள், சமூக வலைதள இன்ப்ளுயன்ஸர்கள், பிரபலங்கள் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் போன்ற பயனர் கணக்குகளுக்கு மட்டுமே ப்ளூ டிக் வழங்கி வந்தது. இதையடுத்து இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் கணக்குகளுக்கு ‘ப்ளூ டிக்’ பெற விரும்பும் பயனர்கள் சந்தா செலுத்தி அதனை பெற்றுக் கொள்ளும் புதிய முறையை சமீபத்தில் மெட்டா நிறுவனம் அறிமுகம் .செய்தது. அதன்படி, பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமின் தாய் நிறுவனமான மெட்டா, தனது பயனாளர்களுக்காக மெட்டாவின் உறுதிப்படுத்தப்பட்ட திட்டத்தில் இணைவதற்கான புளூ டிக் சந்தா கட்டணத்தை வெளியிட்டுள்ளது.
அதில் மொபைலில் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பயன்படுத்துவற்கான மெட்டாவின் உறுதிப்படுத்தப்பட்ட புளூ டிக் சந்தா கட்டணமும், பேஸ்புக்கின் இணையத்தளத்திற்கான கட்டணமும் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது, மெட்டாவின் உறுதிப்படுத்தப்பட்ட புளூ டிக் திட்டம் பீட்டா கட்டத்தில் உள்ளது.மெட்டாவின் உறுதிப்படுத்தப்பட்ட புளூ டிக் திட்டத்திற்கு குறைந்தது 18 வயது 18 வயது அல்லது அதற்கு மேற்பட்ட பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பயனர்கள் தங்கள் கணக்கிற்கான உறுதிப்படுத்தப்பட்ட புளூ டிக்கை பெறலாம். இதற்கு சரிபார்ப்பு ஆவணமாக பயனருடன் பொருந்தக்கூடிய பெயர் மற்றும் புகைப்படத்துடன் கூடிய அரசு ஆவணத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
உறுதிப்படுத்தப்பட்ட புளூ டிக் பெறுவதற்கு about.meta.com/technologies/meta-verified என்பதற்குச் சென்று பேஸ்புக் அல்லது இன்ஸ்டாகிராமைக் கிளிக் செய்து உள்நுழையவும். காத்திருப்புப் பட்டியலில் சேரவும் என்பதைக் கிளிக் செய்யவும், உங்கள் கணக்கு சரிபார்ப்புக்குத் தயாரானதும் அதற்கான மின்னஞ்சல் உங்களுக்கு அனுப்பப்படும். மெட்டா உறுதிப்படுத்தப்பட்ட திட்டத்திற்கான சந்தாவை மொபைல் சாதனங்களில் உள்ள பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகளுக்கு பெறுவதற்கு மாதத்திற்கு ரூ.1,450 ($14.99 USD) செலுத்த வேண்டும். பேஸ்புக்கின் இணையத்தளத்திற்கான சந்தா கட்டணம் ரூ.1,099 ($11.99 USD) செலுத்த வேண்டும். இது தற்போது அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் மட்டும் பயன்பாட்டில் உள்ளது.