கர்ப்பகாலத்தில் பிஎம்ஐ அதிகமாக இருக்கும் பெண்கள் உடல் பருமன் காரணமாக பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள்.
கருவில் உள்ள குழந்தைக்கு முழுமையான ஊட்டச்சத்தை வழங்குவதற்காகவும், முழு ஆரோக்கியத்துடன் இருக்கவேண்டும் என்பதற்காகவும் கர்ப்பிணிகள் அதிக கவனத்துடன் இருப்பது அவசியமாக உள்ளது. பொதுவாக கர்ப்பிணிகள் என்றாலே, வயிற்றில் இருக்கும் குழந்தைக்கும் சேர்த்து சாப்பிட வேண்டும் என்று பெரியவர்கள் கூறுவார்கள். இதனால் அடிக்கடி சாப்பிடுவதால் கர்ப்பிணிகளுக்கு உடல் எடை எடை அதிகரிப்பதற்கு வழிவகுக்கிறது மற்றும் உடல் பருமன் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது. இதனால் பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளை சந்திக்கின்றனர். எனவே கர்ப்ப கால உடல்பருமானால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
கர்ப்பத்தின் இரண்டாவது மூன்று மாதங்களில் உயர் இரத்த அழுத்தம் உருவாகிறது. இது கர்ப்ப காலம் முழுவதும் மற்றும் பிரசவ நேரத்தில் மிகவும் கடுமையான உடல்நல சிக்கல்களுக்கு வழிவகுக்கிறது. ப்ரீ-எக்லாம்ப்சியா என்ற உயர் ரத்த அழுத்தம், கர்ப்பத்தின் இரண்டாம் பாதியில் அல்லது பிரசவத்திற்குப் பிறகு உருவாகிறது. இதனால், உடல் பருமனான பெண்கள் பெரும்பாலும் கல்லீரல் மற்றும் சிறுநீரக செயலிழப்பு மற்றும் சில நேரங்களில் வலிப்பு, மாரடைப்பு மற்றும் பக்கவாதம் உள்ளிட்ட தீவிரமான பிரச்சனைகள் போன்றவை ஏற்படலாம். கருவின் வளர்ச்சி மற்றும் நஞ்சுக்கொடியில் உள்ள சிக்கல்கள் ஆகியவை அடங்கும்
மேக்ரோசோமியா என்ற நிலையில், கரு வழக்கத்தை விட பெரிதாக வளரும், இதன் விளைவாக பிரசவத்தின் போது காயங்கள் ஏற்படும். மேலும், கர்ப்ப காலத்தில் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பது பெரும்பாலும் குழந்தைகளை சாதாரண அளவை விட பெரிதாக வளரும் படி செய்கிறது. இதன் காரணமாக பல தாய்மார்களும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருக்கும். கர்ப்பகாலத்தில் நீரிழிவு கண்டறியப்பட்ட பெண்களுக்கு, அதற்கு பிறகு நீரிழிவு நோய் உருவாகும் அபாயம் உள்ளது, இது குழந்தைகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தலாம்.
கர்ப்ப காலத்தில் வயிறு பெரிதாவதால் மூச்சுத்திணறல் ஏற்படும்; தடைப்பட்ட தூக்கம் அதாவது, ஸ்லீப் அப்னியா பெண்களை மிகவும் சோர்வடையச் செய்யலாம். மேலும், ப்ரீ-இக்லாம்ப்சியா, உயர் இரத்த அழுத்தம், இதயம் மற்றும் நுரையீரல் பிரச்சினைகள் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும். பருமனான கர்ப்பிணிப் பெண்களுக்கு நரம்புக் குழாய் குறைபாடுகள் மற்றும் இதய ரீதியான குறைபாடுகள் போன்ற பிறப்புக் குறைபாடுகள் உள்ள குழந்தைகள் பிறக்க வாய்ப்புள்ளது