ஹெச்டிஎப்சி – ஹெச்டிஎப்சி வங்கி ஜூலை 1 முதல் இணைப்பு..!

இந்தியாவின் மிகப்பெரிய வீட்டுக்கடன் சேவை நிறுவனமான HDFC மற்றும் நாட்டின் முன்னணி தனியார் வங்கியான HDFC Bank இணைப்பு குறித்து தேவையான ஒப்புதல்களை சந்தை கட்டுப்பாட்டு அமைப்புகளிடம் இருந்து பெறப்பட்ட நிலையில் ஜூன் 30 ஆம் தேதி இரு நிறுவனங்களின் நிர்வாக குழுவும் வர்த்தக நேரத்திற்கு பின்பு சந்திக்க உள்ளது என HDFC சேர்மந் தீபக் பாரிக் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.   மேலும் ஜூலை 1 ஆம் தேதி முதல் இணைப்பு நடைமுறைக்கு வர உள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில் ஹெச்டிஎப்சி பங்குகள் இன்று 2.3 சதவீதம் வரையில் செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் உயர்ந்துள்ளது. இது மே மாத துவக்கத்தில் இருந்து இது அதிகப்படியான அளவாகும். ஜூலை 13 முதல் வர்த்தகங்கள் நிறுத்தப்படும் என கூறப்பட்டு உள்ளது.

இதன் மூலம் இணைக்கப்பட்ட நிறுவனத்தின் பங்கு வர்த்தகம் ஜூலை 17 ஆம் தேதி முதல் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஜூன் 30 ஆம் தேதி தான் ஹெச்டிஎப்சி-யின் கடைசி நிர்வாக குழு கூட்டமாக இருக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆர்பிஐ ஏப்ரல் மாதம் சில தளர்வுகளை அளித்து இணைப்பை எளிதாக்கியது குறிப்பிடத்தக்கது.

இந்திய கார்பரேட் சந்தையில் மிகப்பெரிய இணைப்பாக பார்க்கப்படும் HDFC – HDFC Bank இணைப்பு கடந்த வருடம் ஏப்ரல் 4 ஆம் தேதி முடிவு செய்யப்பட்டு இந்தியாவின் மிகப்பெரிய வீட்டுக்கடன் சேவை நிறுவனமான HDFC-ஐ 40 பில்லியன் டாலருக்கு மதிப்பிடப்பட்டு இந்த இணைப்பு கையில் எடுக்கப்பட்டு உள்ளது. இந்த இணைப்பு மூலம் இந்தியாவின் மிகப்பெரிய சக்தி வாய்ந்த நிதியியல் கூட்டமைப்பாக உருவெடுப்பது மட்டும் அல்லாமல் சுமார் 18 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிடப்படுகிறது. இந்த இணைப்பை தொடர்ந்து ஒவ்வொரு 25 ஹெச்டிஎப்சி பங்குகளுக்கு 42 புதிய ஹெச்டிஎப்சி வங்க பங்குகள் வழங்கப்பட உள்ளது. சுமார் 740000 ஹெச்டிஎப்சி பங்குதாரர்கள் உள்ளனர்.

Maha

Next Post

சைடு-சென்டர்னு எந்த ஸ்டாண்டும் இதுக்கு தேவைப்படாது பெய்கோ எக்ஸ்4

Wed Jun 28 , 2023
இந்தியாவில் தன்னுடைய முதல் தயாரிப்பை விற்பனைக்குக் கொண்டு வரும் முயற்சியில் ஐ-கோவைஸ் மொபிலிட்டி (iGowise Mobility) நிறுவனம் மிக தீவிரமாகக் களமிறங்கி இருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாக ஓர் புதிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது. நிறுவனம் அதன் முதல் வாகனத்தை தயாரிப்பதற்கான அனுமதி கோரி அரசிடம் விண்ணப்பித்து இருப்பதாக அந்த தகவல்கள் கூறுகின்றன. ஐ-கோவைஸ் மொபிலிட்டி நிறுவனம் தன்னுடைய முதல் தயாரிப்பாக இ-பைக் ரக பெய்கோ எக்ஸ்4 (BeiGo […]

You May Like