தூத்துக்குடி மாவட்டம் செக்காரக்குடி அரசுப் பள்ளியில் மாணவி ஒருவர், 12ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், செக்காரக்குடி கிராமம் அருகே உள்ள பகுதியைச் சேர்ந்த சோலையப்பன் என்ற வாலிபர் அந்த மாணவியை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். இந்நிலையில், தேர்வு எழுதி விட்டு வந்த மாணவியை பள்ளி அருகே வைத்து சோலையப்பன் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் மாணவியின் தலையை வெட்டியுள்ளார்.
இந்த சம்பவத்தில் பலத்த காயமடைந்த மாணவி அலறி துடித்தார். இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மாணவியை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட வாலிபர் சோலையப்பனை தட்டப்பாறை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காதலிக்க மறுத்த 12ஆம் வகுப்பு மாணவியை இளைஞர் அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.