fbpx

இனி ஆன்லைனிலும் ஆவின் பொருட்கள் விற்பனை!… நுகர்வோருக்கு ஸ்மார்ட் கார்டு!… புதிய அறிவிப்புகள் இதோ!

ஆன்லைனில் ஆவின் பால் பொருட்களை விற்பனை செய்வதற்கான வசதி ஏற்படுத்தப்படும் என்றும் நுகர்வோர் வசதிக்காக ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் பால்வளத்துறை அமைச்சர் நாசர் அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் பால்வளத்துறை மீதான மானிய கோரிக்கை நடைபெற்றது. அப்போது, சட்டப்பேரவையில் அமைச்சர் நாசர் பால்வளத்துறை சார்ந்த 48 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், பால் உற்பத்தியில் எருமை மாடுகளின் பங்களிப்பு முக்கியமாக உள்ளதால் ‘எருமைக் கன்று வளர்ப்பு திட்டம்’ நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அறிவித்துள்ளார். நுகர்வோர்களின் தேவைக்கேற்ப புதிய பால் வகைகள் மற்றும் பால் உபபொருட்கள் அறிமுகப்படுத்தப்படும் என்றும், புதிய தொழில்நுட்பங்களை காட்சிப்படுத்தும் வண்ணம், தேசிய பால் பண்ணை வர்த்தக கண்காட்சி நடத்தப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

இதில், பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பால் மற்றும் பால் பொருட்களை உடனுக்கு உடன் தங்கள் இருப்பிடத்தில் இருந்தபடியே பெற்றுக்கொள்ளவும், ஆவின் விற்பனையை அதிகரிக்கும் நோக்கியிலும், புதிய செயலி மற்றும் இணையதளம் உருவாக்கப்படும் என அறிவித்தார்.ஆவின் பண்ணைகளில் பால் பாக்கெட்டுகள் தயாரிக்க ரூ.30 கோடியில் தானியங்கி இயந்திரங்கள் நிறுவப்படும். ஆவின் ஓய்வூதியர் குடும்ப பாதுகாப்பு நிதி (நலநிதி) உருவாக்கப்படும். அதாவது, கருணை ஓய்வூதியர்களுக்காக நிதியுதவி அளிக்க “ஆவின் ஓய்வூதிய குடும்ப பாதுகாப்பு நிதி” உருவாக்கப்படும். கருணை ஓய்வூதியர்கள் இறந்தால் அவரது குடும்பத்திற்கு நிதியுதவி அளிக்க குடும்ப பாதுகாப்பு நிதி உருவாக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஆவின் நுகர்வோர் வசதிக்காக மாதாந்திர பால் அட்டை பெறுதல், புதுப்பிக்கும் பணிகள் முழுவதும் கணினிமயமாக்கப்படும். பணி முழுவதும் கணினிமயமாக்கப்பட்டு மின்னணு பால் அட்டைகள் (e-milk card) அறிமுகம் செய்யப்படும். எனவே விரைவில் ஆவின் நுகர்வோர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்க உள்ளது. பால் உற்பத்தியாளர்கள் வங்கி கடன் மூலம் புதிய கறவை மாடுகள் வாங்க ஆவின் பால்பெருக்க திட்டம் உருவாக்கப்படும் என்றும் ஆவின் பால்பெருக்கு திட்டம் மூலம் ரூ.2 லட்சம் புதிய கறவை மாடுகள் வாங்கப்பட்ட உள்ளது.

பால் உற்பத்தியாளர்களின் 5 லட்சம் கறவை மாடுகளுக்கு 50% மானியத்தில் காப்பீடு செய்யப்படும். மாதவ்ரத்தில் பால் பண்ணை பூங்கா மற்றும் அருங்காட்சியம் அமைக்கப்படும். சிறந்த பால் உற்பத்தியாளர்கள், சங்க செயலாளர்கள் மற்றும் தொகுப்பு குளிர்விப்பு மைய செயலாளர்களுக்கு ரூ.2 கோடியில் ரொக்க பரிசு வழங்கப்படும் எனவும் அமைச்சர் நாசர் அறிவித்துள்ளார்.

Kokila

Next Post

ஆண்களுக்கான கிரிக்கெட் போட்டி!... வரலாற்றில் முதல்முறையாக பெண் நடுவர் பங்கேற்பு!

Thu Apr 6 , 2023
நியூசிலாந்து – இலங்கை இடையேயான ஆண்கள் டி20 போட்டியில் பெண் நடுவராக பங்கேற்றுள்ளார். ஆண்களுக்கான போட்டியில் பெண் நடுவர் பங்கேற்றது கிரிக்கெட் வரலாற்றில் இதுவே முதல்முறையாகும். ஆண்கள் கிரிக்கெட் போட்டியில் இதுவரை ஆண் நடுவர்கள் மட்டுமே பங்கேற்று வந்துள்ளனர். ஆனால், முதன்முறையாக இன்று நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நடைபெற்ற டி20 போட்டியில் பெண் நியூசிலாந்தை சேர்ந்த கிம் காட்டன் ஒருவர் நடுவராக பங்கேற்றுள்ளார். நியூசிலாந்து மற்றும் இலங்கை […]

You May Like