fbpx

அய்யோ..!! எல்லாம் போச்சே..!! ரூ.12 லட்சம் அபராதமாம்..!! வருத்தத்தில் டூபிளசிஸ்..!!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பெங்களூரு அணிக்கு எதிராக போட்டியில் லக்னோ அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்றது.

ஐபிஎல் கிரிக்கெட்டில் சின்னசாமி மைதானத்தில் ஆர்.சி.பி. – லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதியது. விராட் கோலி அரைசதம், இறுதியில் டூபிளசிஸ் – மேக்ஸ்வெல் மிரட்டல் என எல்லாமே நல்லாத்தான் போனது. இதில், பெங்களூரு அணி 20 ஓவர்களில் 2 விக்கெட் இழந்து 212 ரன்கள் எடுத்தது. இதனால், ரசிகர்கள் உற்சாகத்தில் திளைத்தனர். ஆர்.சி.பி பந்துவீச்சாளர்கள் ஆரம்பத்தில் விக்கெட் வேட்டை நடத்தினர். 213 ரன்களை விரட்டிய லக்னோ 23 ரன்களுக்கு 3 விக்கெட் இழந்து தள்ளாடியது. டி20யில் எதுவும் நடக்கும் என்பதுபோல் அடுத்த வந்த மார்கஸ் ஸ்டோனிஸ் – நிகோலஸ் பூரன் ஜோடி அதிரடியில் மிரட்டினர். இந்த ஜோடி லக்னோவை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றது. கடைசி பந்து வரை சென்ற இப்போட்டியில் லக்னோ த்ரில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் 2-வதாக பந்துவீசிய பெங்களூரு அணி பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதை சுட்டிக்காட்டியுள்ள ஐபிஎல் நிர்வாகம் டூப்ளிசிக்கு அபராதம் விதித்துள்ளது. பெங்களூரு அணி கேப்டன் டூப்ளிஸ்சிக்கு ஐபிஎல் நிர்வாகம் ரூ.12 லட்சம் அபராதம் விதித்துள்ளது. இதேபோல் கடைசி பந்தில் ஒரு ரன் எடுத்து வெற்றிக்கு உதவிய அவேஷ் கான், தலைக்கவசத்தை தரையில் வீசி உற்சாகத்தை வெளிப்படுத்தினார். அதுவும் விதிமீறல் என்பதால் அவருக்கும் ஐபிஎல் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Chella

Next Post

பெண்கள் ஹோட்டலுக்கு செல்ல தடை விதிப்பு..!! தாலிபான்கள் அதிரடி உத்தரவு..!!

Tue Apr 11 , 2023
ஆப்கானிஸ்தானின் ஹெராத் மாகாணத்தில், புல்வெளிகளுடன் கூடிய உணவகங்களுக்குப் பெண்கள் தனியாகவோ, குடும்பத்துடனோ செல்லக் கூடாது என தாலிபான்கள் தடை விதித்துள்ளனர். தாலிபான்கள் இத்தகைய கட்டுப்பாடுகளை ஹெராத் மாகாணத்தில் மட்டும் விதித்துள்ளனர். கடந்த 2021 ஆகஸ்ட் மாதம் ஆட்சியை கைப்பற்றிய தாலிபான்கள், பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். குறிப்பாகப் பெண்களுக்கு என்று பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. 6ஆம் வகுப்புக்கு மேல் பெண் குழந்தைகள் பள்ளிக்குச் செல்லக்கூடாது என்றும், பல்கலைக்கழகங்கள், உடற்பயிற்சி கூடங்கள், […]
பெண்கள் ஹோட்டலுக்கு செல்ல தடை விதிப்பு..!! தாலிபான்கள் அதிரடி உத்தரவு..!!

You May Like