அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள ஓபிஎஸ், வரும் 23ம் தேதி திருச்சியில் முப்பெரும் விழா நடத்தப்படும் என்று அறிவித்துள்ளார். இந்த மாநாட்டிற்கு சசிகலா, டிடிவி தினகரன் உள்ளிட்டோருக்கும் அழைப்பு விடுக்கப்படும் என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.. இந்த நிலையில் ஓபிஎஸ் அந்த மாநாட்டிற்கு அழைத்தால், அதுகுறித்து பின்னர் முடிவெடுக்கப்படும் என்று சசிகலா தெரிவித்துள்ளார்..
டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாள் விழா நிகழ்ச்சியில் சசிகலா கலந்து கொண்டார்.. அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் “ சிவில் நீதிமன்றத்தின் முடிவு தெரியாமல் எந்த முடிவும் நிரந்தரம் இல்லை என்று உச்ச நீதிமன்றமே சொல்லியிருக்கிறது. அதிமுகவில் குறிப்பிட்ட 3 பேரை தவிர யார் வேண்டும் என்றாலும் இணையலாம் என்று சொல்கிறார்கள் என்று கேட்கிறீர்கள். இது குறித்து தொண்டர்களிடம் தான் கேட்க வேண்டும்.
ஏனென்றால் நான் எல்லோருக்கும் பொதுவான தலைவர்.. அதிமுகவில் நான் சாதி பார்த்ததில்லை.. சாதி பார்த்திருந்தால், கவுண்டர் சமுதாயத்தை சேர்ந்த ஒருவரை நான் முதலமைச்சராக ஆக்கியிருப்பேனா..? அதிமுகவில் இருந்து விலகிய அனைவரையும், விரைவில் ஒருங்கிணைப்பேன்.. ஓபிஎஸ் சந்திக்க நேரம் கேட்டால், நிச்சயம் வழங்குவேன்.. மாநாட்டிற்கு அழைத்தால் பின்னர் முடிவெடுக்கப்படும்..
தமிழ்நாட்டிற்கு ஒரு நல்லதை செய்ய வேண்டும் என்றால் அதிமுக இருந்தே ஆக வேண்டும். அதிமுக உள்கட்சி பூசலை, திமுக எப்படி பயன்படுத்திறது என்பதைத்தான் பார்க்க வேண்டும். அதிமுகவில் அனைவரும் ஒன்று சேரக்கூடாது என திமுக செயல்பட்டு வருகிறது. திமுக சட்டமன்றத்திலும் இரட்டை வேடம் போடுகிறது. கோடநாடு வழக்கை அரசியலுக்காக திமுக பயன்படுத்தி வருகிறது..” என்று தெரிவித்தார்..