Mygov இணையத்தில் இலச்சினை(Logo) மற்றும் மேற்கோள் வாசக வடிவமைப்பு போட்டி நடைபெற உள்ளது.
நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்பு துறை (டிஏஆர்பிஜி) அதன் மையப்படுத்தப்பட்ட மக்கள் குறைதீர்ப்பு மற்றும் கண்காணிப்பு அமைப்பின் இணைய தளத்திற்கு, மனதில் நிற்கும் வகையிலான இலச்சினை(Logo) மற்றும் மேற்கோள் வாசகத்தை வடிவமைப்பதற்கான போட்டியை MyGov தளத்தில் நடத்துகிறது.
இதில் பங்கேற்குமாறு பொதுமக்களுக்கு நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்பு துறை அழைப்பு விடுத்துள்ளது. இதற்கான பதிவுகள் 2023 ஏப்ரல் 10-ம் தேதி தொடங்கியுள்ளது. பொதுமக்கள் தங்களது பதிவுகளை சமர்ப்பிக்க 2023 மே 1ம் தேதி கடைசி நாளாகும். தேர்வு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்படும் மேற்கோள் வாசகம் மற்றும் இலச்சினைக்கு ரூ.51,000 பரிசாக வழங்கப்படும்.
அத்துடன் நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறையின் சான்றிதழும் வழங்கப்படும். இந்தப் போட்டியில் 18 வயதுக்கு மேற்பட்ட இந்திய மக்கள் அனைவரும் பங்கேற்கலாம். விருப்பமுடையவர்கள் https://secure.mygov.in/node/339141 என்ற இணைய தளத்தில் குறிப்பிட்ட காலத்திற்கு முன்பு தங்களது பதிவுகளை சமர்ப்பிக்கலாம். போட்டித் தொடர்பான விவரங்களுக்கு நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறையின் 011-24622461 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.