விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி அக்.9ஆம் தேதி தொடங்கியது. இதில் 21 போட்டியாளர்கள் பங்கேற்றனர். பின்னர் இதில் வைல்ட் கார்ட் என்ட்ரியாக மைனா நந்தினி பங்கேற்றார். பின்னர் ஒவ்வொரு வாரமும் மக்களின் மக்களின் வாக்குகளின் அடிப்படையில் குறைந்த வாக்குகளை பெற்ற போட்டியாளர்கள் வீட்டிலிருந்து வெளியேறினர். போட்டி இறுதி கட்டத்தை எட்டும் சூழலில் போட்டியாளர் கதிரவன் பணமூட்டையை எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறினார். இறுதியில் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் அதிக வாக்குகளை பெற்று டைட்டில் வின்னர் பட்டத்தை அசீம் தட்டிச்சென்றார்.
பிக்பாஸ் 6 நிகழ்ச்சியில் மக்கள் அதிகம் பழக்கப்பட்ட பிரபலங்களும், நமக்கு தெரியாத சில முகங்களும் இருந்தனர். அப்படி நாம் பார்த்து பழகிய பிரபலங்களில் ஒருவர் தான் அமுதவாணன், இவர் விஜய் தொலைக்காட்சியில் வராத நிகழ்ச்சியே இல்லை என்றே கூறலாம். பிக்பாஸில் கலந்துகொண்டு நன்றாகவே விளையாடி வந்தார். நிகழ்ச்சியில் அவரது மகன் வந்து பலரை போல மிமிக்ரி செய்த வீடியோ ரசிகர்களிடம் அதிகமாகவே வைரலானது.
தொடர்ந்து நிறைய பிரபலங்கள் கார் வாங்கிவரும் நிலையில் அமுதவாணனும் தற்போது புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார். தனது குடும்பத்துடன் சென்று அவர் கார் வாங்கி அங்கு புகைப்படமும் எடுத்துள்ளார். அந்த புகைப்படங்கள் வெளியான நிலையில், ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.