fbpx

ராஷ்மிகாவை பின்னுக்கு தள்ளிய மிருணாள் தாகூர்..!! ஒரு படத்தில் நடிக்க இத்தனை கோடி சம்பளமா..?

சீதா ராமம் படத்தின் வெற்றியால் நடிகை மிருணாள் தாகூரின் சம்பளம் 3 மடங்காக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொலைக்காட்சி சீரியல்களில் தன் நடிப்புப் பயணத்தைத் தொடங்கி ‘சீதாராமம்’ என்ற ஒற்றைப் படத்தின் மூலம் புகழின் உச்சத்திற்கு சென்றவர் நடிகை மிருணாள் தாகூர். எந்தவித பின்புலமும் இன்றி பாலிவுட்டில் சீரியல் உலகில் முதலில் காலடி எடுத்து வைத்த மிருணாள், வாரிசு நடிகர், நடிகைகளுக்கு மத்தியில் கடின உழைப்பால் வளர்ந்த நடிகைகளுள் ஒருவராகக் கொண்டாடப்படுகிறார்.

2012ஆம் ஆண்டு ‘முஜ்சே குச் கெஹ்தியே காமோஷியான்’ எனும் சீரியலில் மூலம் அறிமுகமான மிருணாள், தொடர்ந்து 2014ஆம் ஆண்டு பாலிவுட்டில் லவ் சோனியா படத்தில் நடித்து பெரிதும் கவனம் ஈர்த்தார். அதன் பின் சூப்பர் 30, டூஃபான் படங்களில் பாலிவுட்டில் நடித்த மிருணாள், டோலிவுட்டில் சீதாராமம் படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவில் கால் பதித்தார். நடிகர் துல்கர் சல்மான், நடிகை ராஷ்மிகா மந்தனாவுடன் இணைந்து இந்தப் படத்தில் மிருணாள் நடித்திருந்த நிலையில், சீதாராமம் படம் மிருணாளை பெரும் புகழ் வெளிச்சத்துக்கு இட்டுச் சென்றது. இளவரசி நூர்ஜஹான் எனப்படும் சீதா மகாலட்சுமி கதாபாத்திரத்தில் நடிகை மிருணாள் க்ளாசிக் லுக்கில் வந்து பான் இந்தியா ரசிகர்களை ஒட்டுமொத்தமாக ஈர்த்திருந்தார். மிருணாள் அடுத்ததாக நானி 30 படத்தில் நடிகர் நானியுடன் கமிட் ஆகியுள்ளார்.

இந்நிலையில், மிருணாள் சீதாராமம் படத்தில் வாங்கியதை விட 3 மடங்கு அதிகமான சம்பளத்துக்கு இந்தப் படத்தில் ஒப்பந்தமாகி உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. டோலிவுட்டில் டாப் ஸ்டார்களுள் ஒருவராக வலம் வரும் நடிகை ராஷ்மிகாவுக்கு சீதாராமம் படத்தில் ரூ.4 கோடி சம்பளம் வழங்கப்பட்ட நிலையில், இந்தப் படத்தில் மிருணாளுக்கு ரூ.2 கோடி சம்பளமாக வழங்கப்பட்டது. இந்நிலையில், தற்போது நானி 30 படத்துக்காக மிருணாளுக்கு ரூ.6 கோடி சம்பளமாக வழங்கப்படுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதேசமயம் மிருணாள் தாக்கூர் சமூக வலைதளங்களில் தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். சமீபகாலமாக அவர் வெளியிடும் புகைப்படங்கள் மிகப்பெரிய அளவில் வைரலாகியது என்பது குறிப்பிடத்தக்கது.

Chella

Next Post

காவல்துறையினர் மீது மிளகாய் பொடி தூவி இருவர் மீது சரமாரி தாக்குதல்…..! திண்டுக்கல் அருகே பரபரப்பு…..!

Wed Apr 19 , 2023
திண்டுக்கல் பகுதியில் சின்னத்தம்பி என்பவர் சென்ற மாதம் பழிக்குப்பழியாக ஒரு கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அந்த வழக்கில் திண்டுக்கல் பகுதியைச் சேர்ந்த யுவராஜ்குமார்( 29), விக்னேஷ் (33) உதித்த 2 இளைஞர்கள் கைது செய்யப்பட்டார்கள் இவர்கள் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப் படுத்தப்பட்டு விருதுநகரில் உள்ள மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட சமயத்தில் இவர்கள் 2 பேர் கையிலும் வெட்டு காயம் ஏற்பட்டதன் காரணமாக, யுவராஜ்குமாரும், […]

You May Like