சிக்கிம் தலைநகர் காங்டாக்கில் 6ஆம் வகுப்பு படிக்கும் மாணவி, பள்ளியில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த கால்டாக்சி ஓட்டுநர் ஒருவர், லிப்ட் கொடுப்பதாக கூறி சிறுமியை அழைத்துள்ளார். முதலில் சிறுமி டாக்சியில் ஏற மறுத்துள்ளார். இருப்பினும் அவர் அன்பாக பேசி வலுக்கட்டாயமாக கூறியதால் சிறுமி டாக்சியில் ஏறியுள்ளார். வீட்டுக்கு செல்லும் வழியில் பெட்ரோல் பங்க் பகுதியில் டாக்சியை நிறுத்தி, அந்த மாணவிக்கு தின்பண்டங்கள் மற்றும் பழச்சாறுகளை வாங்கிக் கொடுத்துள்ளார். அதன்பிறகு புறப்பட்டு சென்ற நிலையில், ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் டாக்சியை நிறுத்திவிட்டு அந்த சிறுமியை அருகிலுள்ள காட்டிற்கு அழைத்துச் சென்றார்.
அங்கு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அப்போது சிறுமி கத்தியதால் பாலியல் பலாத்காரம் செய்த ஓட்டுநர், அங்கேயே கழுத்தை நெரித்து கொன்று விட்டு தப்பினார். இதற்கிடையே தனது மகளை காணவில்லை அவரது பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். சுமார் 3 நாட்களுக்கு பிறகு சிறுமியின் உடல் அந்த காட்டுப்பகுதியில் கிடப்பதை அறிந்து போலீசார், அங்கு விரைந்து சிறுமியின் உடலை மீட்டனர். விசாரணையில் சிறுமி பலாத்காரம் செய்து கொல்லப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்ததால், கால்டாக்சி ஓட்டுநர் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிந்து, அவரை தேடி வருகின்றனர். அவர் பெட்ரோல் பங்க் சென்ற சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் தேடி வருகின்றனர்.