உத்தரப்பிரதேச மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்ட ராஜ்நாத் சிங் உத்தரபிரதேச மாநிலத்தில் பலமுறை முதலமைச்சராக இருந்திருக்கிறார். இந்த நிலையில் கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற பொது தேர்தலில் பாஜக சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்று அப்போது உள்துறை அமைச்சர் என்ற மிகப் பெரிய பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டது.
அதன் பிறகு கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற பொது தேர்தலில் நரேந்திர மோடி தலைமையிலான அரசு மிகப்பெரிய வெற்றியை பெற்றதை தொடர்ந்து இம்முறை அவருக்கு பாதுகாப்புத்துறை அமைச்சராக போருக்கு வழங்கப்பட்டது.
இந்த நிலையில், இவருக்கு தற்போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டில் கடந்த சில வாரங்களாகவே நோய் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகின்ற சூழ்நிலையில், மத்திய மாநில அரசுகள் நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது.
மருத்துவமனைகள் மற்றும் நீதிமன்றங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நோய் தொற்றின் பாதிப்பு கடந்த சில தினங்களாக அதிகரித்து வருகின்ற சூழ்நிலையில் தற்சமயம் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜநாத் சிங் அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மத்திய அரசு வட்டாரங்களில் மிகப்பெரிய அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.