நம்முடைய அண்டை மாநிலமான கர்நாடகாவில் வருகின்ற மே மாதம் 10ம் தேதி சட்டசபை பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அதிமுக போட்டியிடுவதற்கு முனைப்பு காட்டி வருகிறது எடப்பாடி பழனிச்சாமி கூட்டணியில் களம் காணலாம் என நினைத்தார். ஆனாலும் அதற்கு பாஜக மேரிடம் சம்மதிக்காததை தொடர்ந்து கர்நாடக மாநிலத்தில் பாஜக உடனான கூட்டணியை முறித்தார். மேலும் புலிகேசி நகரில் அதிமுக தரப்பில் வேட்பாளரை அறிவித்துள்ளார் எடப்பாடி பழனிச்சாமி.
இது ஒரு புறம் இருக்க பன்னீர்செல்வம் கர்நாடக மாநில சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்து புலிகேசி நகர் தொகுதியில் தன்னுடைய தரப்பு வேட்பாளரை அறிவித்திருக்கிறார்.
இத்தகைய நிலையில், தற்போது மேலும் இரண்டு வேட்பாளர் லைவ் பன்னீர்செல்வம் தரப்பில் அவர் அறிவித்துள்ளார். அதன்படி கோலார் மற்றும் காந்திநகர் உள்ளிட்ட இரு தொகுதிகளில் பன்னீர்செல்வம் தரப்பு சார்பாக வேட்பாளர்கள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். அதன்படி கோலார் தங்க வயல் தொகுதியில் ஆனந்தராஜ் என்பவரும், காந்திநகர் சட்டமன்ற தொகுதியில் கே குமார் என்பவரும் வேட்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.