சென்ற தமிழக சட்டசபை பொதுத் தேர்தலின் போது திமுக சார்பாக திமுக ஆட்சிக்கு வந்துவிட்டால் குடும்ப கல்விகளுக்கு மாறும் தோறும் 1000 ரூபாய் உரிமை தொகை வழங்கப்படும் என்று தற்போதைய முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
ஆனால் அவர் ஆட்சிக்கு வந்து சற்றேற குறைய 2 ஆண்டுகள் முடிவடைய உள்ள நிலையில், இன்னும் அதற்கான எந்தவித ஆயத்த பணிகளும் தொடங்கப்படவில்லை என்று எதிர் கட்சிகள் மிகக் கடுமையாக விமர்சனங்களை முன் வைத்தனர்.
இந்த நிலையில், ஒரு கோடி மகளிர் மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமைத் தொகையை பெற இருக்கிறார்கள் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். மிக மோசமான நிதி நெருக்கடி இருக்கின்ற சூழ்நிலையிலும் மகத்தான திட்டங்களை தமிழக அரசு செய்து கொடுத்திருக்கிறது என்று கூறியுள்ளார்.
அத்துடன் இனி தமிழகத்தில் திமுக தான் ஆள வேண்டும் என்று மக்கள் மன நிறைவுடன் முடிவெடுத்து இருக்கிறார்கள் என்றும் அவர் பெருமிதம் தெரிவித்தார்.