கோடை காலம் தொடங்கிவிட்டது வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் மக்கள் இந்த வெயிலின் தாக்கத்தை தாங்க முடியாமல் பல இன்னல்களுக்கு ஆளாகிறார்கள். சிறிது தூரம் வெளியில் சென்று வந்தாலே நீர் சத்து குறைந்து உடல் சோர்வாக இருக்கும். இந்த சமயத்தில் நாம் எவ்வளவு தண்ணீர் குடித்தாலும் தாகம் மட்டும் அடங்கவே அடங்காது.
இப்படிப்பட்ட சமயத்தில் தான் நாம் தர்பூசணி முலாம்பழம், கரும்புச்சாறு, எலுமிச்சை ஜூஸ் உள்ளிட்ட அதிக நீர் சேர்த்துக் கொண்ட பழங்களை தேர்வு செய்து சாப்பிடுவோம் இப்படி கோடை காலத்திற்கு உடலை நீர் செலுத்துடன் வைக்கக்கூடிய முலாம் பழத்தின் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளும் இருக்கின்றன. இதோ அதன் முழுமையான விவரத்தை இங்கே நாம் காண்போம்.
இந்த முலாம் பழத்தில் விட்டமின் சி போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன. இவை நம்முடைய நோய் எதிர்ப்பு மண்டலம் பலவீனம் ஆவதை தடுத்து நிறுத்துகிறது. ஆகவே நாம் தொடர்ச்சியாக இந்த கோடைகாலத்தில் முலாம் பழங்களை சாப்பிட்டால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக் கொள்ளலாம்.
இந்த முலாம் பழத்தில் பல சைலோகைன்கள் இருக்கின்றன. இவை சிறுநீரக கற்களை தடுப்பதற்கும் நம்முடைய உடலில் சிறுநீரகங்களின் செயல்பாடு சீராக இருக்கவும் உதவி புரிகிறது. இந்த முலாம் பழத்தில் பல்வேறு நீர் சத்துக்கள் இருப்பதைப் போல அதிக அளவில் நார் சத்துக்களும் இருக்கிறது. இவற்றை நாம் சாப்பிடும் போது இதில் உள்ள நார்ச்சத்து குடல் இயக்கத்தை சீராக வைத்திருப்பதோடு மலச்சிக்கலையும் தடுக்கிறது.
இந்த முலாம்பழம் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் மிகவும் பயனுள்ள ஒரு பழமாக இருக்கிறது. ஏனென்றால் அதன் சபை முதல் விதைகள் வரையில் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை கொடுக்கிறது. இந்த பழத்தை நாம் உணவில் சேர்த்துக் கொள்ளும் போது பல்வேறு நோய்களிலிருந்து உடலை பாதுகாக்கும்.
அதோடு, முலாம் பழத்தில் உள்ள விதைகள் மற்றும் பழத்திலிருந்து ஒரு பேஸ்ட்டை தயாரிப்பதன் மூலமாக இயற்கையான முகக் கவசத்தை செய்து கொள்ள இயலும் இந்த பேஸ்ட்டை நீங்கள் உபயோகிக்கும் போது சருமம் தொடர்பான பிரச்சனைகளான வறட்சி மற்றும் கருந்தழுவுதல் உள்ளிட்டவற்றை தடுக்க உதவி புரிகிறது.
அதோடு மட்டுமல்லாமல் இந்த பழத்தில் இருக்கின்ற விட்டமின் ஏ தலைமுடி ஆரோக்கியத்திற்கும் மன அழுத்தத்தை குறைக்கவும் உதவி புரிகிறது. அதோடு இதய ஆரோக்கியத்தை பாதுகாத்தல், உடல் எடை குறைப்பு, ஆரோக்கியமான தோல் வளர்ச்சிக்கு இது உதவியாக இருக்கிறது. ஆகவே இந்த கோடைகால சீசனில் நம்முடைய உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க முலாம் பழத்தை மறக்காமல் உணவு பட்டியலில் சேர்த்துக் கொள்வோம்.