கன்னட தொலைக்காட்சி நடிகர் சம்பத் ஜே ராம், தற்கொலை செய்து கொண்டார்.
கன்னட தொலைக்காட்சி நடிகர் சம்பத் ஜே ராம், பெங்களூரு அருகே நெலமங்களாவில் உள்ள தனது வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 35. உயிரிழப்புக்கான காரணம் என்ன என்று தெரியவில்லை, காவல்துறையினர் முதற்கட்டமாக தற்கொலை என சந்தேகித்துள்ளனர். அவர் மன அழுத்தத்தில் இருந்ததாகவும், போதிய வேலை கிடைக்காததால் அவர் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகவும் பல ஊடக அறிக்கைகள் கூறுகின்றன.
நடிகர் ஒரு வருடத்திற்கு முன்பு தான் திருமணம் செய்து கொண்டார். இருப்பினும், அவரது குடும்ப உறுப்பினர்கள் எவரிடமிருந்தும் இறப்புக்கான காரணம் என்ன என்று அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் இல்லை. அக்னிசாக்ஷி உட்பட பல ஹிட் தொலைக்காட்சி தொடர்களில் சம்பத் ஜே ராம் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார். தெலுங்கு நடிகரும் இயக்குனருமான ராஜேஷ் துருவா அவரது மறைவுக்கு பேஸ்புக்கில் இரங்கல் தெரிவித்துள்ளார்.