தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு வரையில் படிக்கும் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என்று பள்ளிகளுக்கு துறை சார்பாக அறிவிக்கப்பட்டு இருந்தது ஆனால் ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் எல்லோருக்கும் தேர்ச்சி வழங்குவதால் 10ம் வகுப்பில் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறைகிறது.
ஆகவே ஒன்பதாம் வகுப்பில் மாணவர்கள் தேர்ச்சி பெறுவதற்கு சில முக்கிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கிறது அதன்படி 9ம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவரை தேர்ச்சி அடைய செய்வதற்கு அவர் ஒவ்வொரு பாடத்திலும் குறைந்தபட்சம் 25 மதிப்பெண்கள் பெற்று எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
உடற்கல்வி பாடத்தையும் சேர்த்து குறைந்தது 150 மதிப்பெண் இருக்க வேண்டும் நிச்சயமாக அந்த மாணவருக்கு 75 சதவீதத்திற்கும் அதிகமான வருகை பதிவு இருக்க வேண்டும் 9ம் வகுப்பில் படிக்கும் மாணவர் இறுதி தேர்வில் ஒரு பாடத்தில் அல்லது அனைத்து தேர்விற்கும் வரவில்லை என்றால் அந்த மாணவர் அதற்கான மருத்துவ சான்றிதழ் ஒப்படைக்க வேண்டும்.
அப்படி செய்தால் காலாண்டு அல்லது அரையாண்டு மதிப்பெண்களை எடுத்துக் கொள்ளலாம். அந்த விதிகளுக்கு ஒரு மாணவன் உருப்படவில்லை என்றால் அந்த மாணவரை தேர்ச்சி பெற செய்ய முதன்மை கல்வி அலுவலரின் சிறப்பு அனுமதி பெற்று இருக்க வேண்டும் என்று அரசு அறிவித்திருக்கிறது.