fbpx

பிரதமர் மோடி ஒரு விஷ பாம்பு போன்றவர்…! காங்கிரஸ் தலைவர் சர்ச்சை கருத்து…!

பிரதமர் நரேந்திர மோடி ஒரு விஷ பாம்பு போன்றவர் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடகா மாநிலத்திற்கான சட்டமன்றத் தேர்தல் வருகின்ற மே 10-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தீவிரமாக பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் நேற்று பிரச்சாரம் செய்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பிரதமர் நரேந்திர மோடி ஒரு விஷ பாம்பு போன்றவர். அவர் நக்கினால் செத்துவிடுவீர்கள் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சி சார்பில் கர்நாடகா மாநிலம் கலபுர்கியில் நேற்று நடைபெற்ற தேர்தல் கூட்டத்தில் பேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ; பிரதமர் நரேந்திர மோடி ஒரு விஷப்பாம்பு போன்றவர். அவர் விஷமா இல்லையா என்று நீங்கள் நினைக்கக்கூடும். ஆனால் நக்கினால் நீங்கள் செத்துவிடுவீர்கள் என பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

அவரது இந்த பேச்சுக்கு கர்நாடக மாநில முதலமைச்சர், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், பாஜக மூத்த அமைச்சர்கள் பலர் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். கார்கே உடனடியாக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர்.

Vignesh

Next Post

சற்றுமுன்..! சென்னையில் இருந்து விமானத்தில்‌ டெல்லிக்கு புறப்பட்டார்‌ முதல்வர் ஸ்டாலின்...!

Fri Apr 28 , 2023
சென்னையில் இருந்து விமானத்தில்‌ டெல்லிக்கு புறப்பட்டார்‌ முதல்வர்‌ மு.க.ஸ்டாலின்‌. குடியரசுத்‌ தலைவர்‌ திரெளபதி முர்முவை சந்திக்க சென்னையில் இருந்து விமானத்தில்‌ டெல்லிக்கு புறப்பட்டார்‌ முதல்வர்‌ மு.க.ஸ்டாலின்‌. கிண்டியில்‌ கட்டப்பட்டுள்ள பன்னோக்கு மருத்துவமனையை திறந்து வைக்க இன்று காலை 11:30 மணிக்கு குடியரசுத்‌ தலைவர்‌ திரெளபதி முர்முவை சந்தித்து அழைப்புவிடுக்க உள்ளார் முதல்வர்‌ மு.க.ஸ்டாலின்‌. சென்னை கிண்டியில் உள்ள கிங் நோய் தடுப்பு, ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் ரூ.230 கோடியில் பன்னோக்கு […]

You May Like